தமிழ் கடவுள் முருகனின் மூன்று சக்திகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தமிழ் கடவுள் முருகனின் மூன்று சக்திகள் பற்றிய பதிவுகள் :

இச்சா சக்தி

முருகனின் மூன்று சக்திகளில் இச்சா சக்தியின் உருவமாக இருப்பவள் வள்ளி. இவள் திருமாலின் மகளான சுந்தர வல்லி என்கிறது புராணம். முருகனின் வலப்புறம் இருப்பாள். வலது கையில் இவள் ஏந்தியுள்ள தாமரை மலர் , முருக பெருமானின் கண்ணிலிருந்து வரும் சூரிய காந்தம் பட்டு எப்போதும் மலர்ந்திருக்கும். அமுதசுரப்பி , ஏயினர் குலோத்துமை , பெண்கள் நாயகம் என்றெல்லாம் இலக்கியம் போற்றும் இவளை வழிபட்டால் இனிய வாழ்வு பெறலாம்.

கிரியா சக்தி

அவரது கிரியா சக்தியாக இருப்பவள் தெய்வானை. திருமாலுடைய மகளான அமுத வல்லியே இவள் என்பது புராணம். இவள் முருகனின் இடது பக்கம் இருப்பாள். இவள் தன் கையில் கருங்குவளை மலரை ஏந்தியிருப்பாள். அம்மலர் முருகப் பெருமானுடைய இடது கண்ணிலிருந்து வரும் சந்திரக்கலை பட்டு எப்போதும் மலர்ந்திருக்கும். இவளை அமுதமாது , தேவகுஞ்சரி , வேழமங்கை என பல பெயர்களால் அழைப்பர். இவள் பொன் உலகுக்கு உரியவள். இவளை வழிபட்டால் வறுமை நீங்கி வளம் பெறலாம்.

ஞான சக்தி

முருகனின் கையில் உள்ள வேல் ஞானசக்தியின் அடையாளமாகும். கோடிக்கணக்கான சூரியன் சேர்ந்தால் எவ்வளவு ஔி கிடைக்குமோ , அந்த அளவு பிரகாசம் இந்த வேலுக்கு உண்டு என்கிறது திருப்புகழ். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top