ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு பற்றிய பதிவுகள் :

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.

இவரது மந்திரம் ஞாபக சக்தி தரும். ஞானம், மோக்ஷம், நற்குணங்கள் தரும். (க்ஷிப்ர பிரசாதனர் ) விரைந்து அருள் செய்பவர். இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற ,கடன் தீர ,அடமானம் வைத்த பொருள் ,நகைகளை மீட்ட, காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.   

ஸ்ரீ வித்யா உபாஸனை மந்திர சாஸ்திரத்தில் உயர்வான வித்தை இதைப் பற்றி இயற்றப்பட்ட கிரந்தங்களில் பெரியதும் சிறந்ததும் இவரால் இயற்றப்பட்டதே. அதை பின்பற்றி இவரது சீடரான ஸ்ரீ பரசுராமரால் சுருக்கமாக இயற்றப்பட்ட கிரந்தமே ஸ்ரீ வித்யா உபாசகர்களால் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது.

அவதூதர்களுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரே சத்குரு. சகுன உபாசகர்களுக்கு கற்பக மரம் போல் நல்வாழ்வு தருபவரும்,நிர்குண உபாசகர்களுக்கு சத்குருவாய் விளங்கி ஆன்ம உயர்வு தந்து ஜீவசமாதி ஆகும் நிலை வரை அருள் செய்பவர்.

தத்தாத்ரேயர் வழிபாடு யோகிகளால் அதிகம் பின்பற்றப் பட்டு வருகிறது. விரைவில் பலன் தரக் கூடியது.

தத்தாத்ரேயரை உபாஸிக்க விரும்புவோர் ஒரு குருவிடம் முறைப்படி தீக்ஷை பெற்று உபாசனை விதிகளை நன்கு அறிந்து ஜெபிப்பதே உயர்வுக்கு வழி.

ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம் :-

மாலகமண்டலு தர கரபத்மயுக்மே |
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |
அத்யஸ்த ஊர்த்வ கரயோ : சுப சங்க சக்ரே |
வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||

பொருள் : 

மாலை, கமண்டலம் , உடுக்கை, ஈட்டி , சங்கு, சக்கரம் இவற்றைக் தம் ஆறு கரங்களில் தாங்கியவரும் அத்ரி மகரிஷியின் மகனுமான ஸ்ரீ தத்தாத்ரேயரே தியானிக்கிறேன்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி 

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத் ||

ஸ்ரீ தத்தாத்ரேயர் மந்திரம் :-

1.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ||

2.ஓம் குரு தத்த நமோ நமஹ||

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top