எந்த திதியில் எந்த கடவுளை வழிபடுவது சிறப்பு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திதி வழிபாடு பற்றிய பதிவுகள் :

சதுர்த்தியில் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுவது உகந்தது. சகல கஷ்டங்களையும் தோஷங்களையும் போக்கி அருளுவார் ஆனைமுகத்தான்.

சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்தது. இந்த நாளில் விரதமிருந்து முருகக் கடவுளை ஆராதிப்பார்கள் பக்தர்கள். 

அதேபோல் ஏகாதசி திதி என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள். இந்தநாளில், பெருமாள் கோயில்களுக்குச் சென்று தரிசிப்பதும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வார்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட வேண்டும். 

இதேபோல், தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கானது. பைரவரை இந்தநாளில் வழிபடுவது விசேஷம். 

வளர்பிறை பஞ்சமி திதி வாராஹி தேவிக்கு உரிய நாள். இந்தநாளில், வாராஹியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்வார்கள் பக்தர்கள். சதுர்த்தியும் விசேஷமானது தான். சதுர்த்தியில், விரதமிருந்து மேற்கொள்வார்கள் பக்தர்கள். 

வீட்டில் உள்ள பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் எதிர்ப்புகளையெல்லாம் வலிமை இழக்கச் செய்யும்.
 இன்னல்களையெல்லாம் போக்கிவிடும். சுண்டல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ள வேண்டும்.

இந்த நன்னாளில், விநாயகர் அகவல் பாராயணம் படிப்பது, குடும்பத்தில் மேன்மையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும். தம்பதி இடையே உள்ள கருத்து வேற்றுமைகள் நீங்கும்.

அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று ஆனைமுகனை கண்ணாரத் தரிசித்து வேண்டிக் கொள்ளுங்கள. பிள்ளையாரைப் பிரார்த்தனை செய்து கொண்டு சிதறுகாய் உடைத்து வேண்டுங்கள். சிக்கல்களெல்லாம், கஷ்டங்களெல்லாம் சிதறுகாய் போல் தூள்தூளாகும் .

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top