நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கோவில்களில் தரும் கயிற்றை எத்தனைநாள் கட்டியிருக்கலாம் என்பதைப் பற்றிய ஒரு சிறு பதிவு :

கோவிலுக்கு செல்லும்போது பொதுவாக நாம் அனைவரும் அங்கே வழங்கப்படும் கயிற்றை வாங்கி வருவது வழக்கம். இன்னும் ஒரு சிலர்; தன்னுடைய விருப்பங்களை வேண்டிக்கொண்டு நிறைவேறுவதற்காக கையில் கட்டிக்கொள்கின்றனர்.

இன்னும் ஒருசிலர்; தங்களை தீமைகளில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்து விலக்கிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர்.

காசி, திருப்பதி போன்ற இடங்களிலும் மற்றும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர்; கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறும் தரப்படுகிறது. அதுவும் கையில் கட்டப்படுகிறது.

எத்தனை முடிச்சு போடவேண்டும் :

கையில் ஐந்து முடிச்சுக்கள் போட வேண்டும். ஆணவம், பொறமை, ஆசை, உடல் நிலையானது ஆகியவற்றைக் குறிக்கின்றன.

பலன்கள் :

பயத்தை போக்கும், 
தைரியத்தை தரும், 
கர்ம வினைகளை அழிக்கும், 
விபத்துகளிலிருந்து காக்கும்.
ஏவல், பில்லி, சூனியம் செய்வினை போக்கும்,
நோய்களையும், தோஷங்களையும் விலக்கும்.
தீயகனவுகளை தோன்றாமல் செய்யும்.
கடன்கள் தீரும்.
பைரவர் அருளை பெருக்கும்.

அதை எந்த கையில் கட்டவேண்டும்?

ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும்.

எத்தனை நாள் கட்டவேண்டும்?

இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. 

இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும். யார் காலிலும் படும்படி போடக்கூடாது.

இது உங்கள் உடல் நலத்திற்கும், வாழ்க்கை வளத்திற்கும் அரணாக அமையும் !

Post a Comment

Previous Post Next Post