சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷம் பற்றிய பதிவுகள் :

சிவனாருக்கு உகந்த பூஜைகளில், பிரதோஷ பூஜை மிக மிக முக்கியமானது. இந்தநாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று தரிசிப்பது மிகுந்த பலன்களைத் தரும். சுக்கிர வார பிரதோஷம் சிறப்பு வாய்ந்த்து. 

சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில், பிரதோஷம் வருவதும் சுபிட்சம் தருவது. ஐஸ்வர்யம் பெருகும் என்பது உறுதி. மறக்காமல், தென்னாடுடைய சிவனை தரிசனம் செய்யுங்கள்.

பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே மாலையில், பிரதோஷ நேரத்தில், சிவபெருமானுக்கும் நந்திதேவருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். காணக் கிடைக்காத அற்புதக் காட்சியைக் கண்ணாரத் தரிசிப்பதும் மனதார அப்போது பிரார்த்திப்பதும் மிகுந்த பலனைத் தரும்!

அபிஷேகத்துக்கானப் பொருட்களை வழங்குவது இன்னும் புண்ணியம். எனவே பிரதோஷ நாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.

மேலும் சிவனாருக்கு வில்வமும் நந்திதேவருக்கு அருகம்புல்லும் சார்த்துங்கள். பிரதோஷ பூஜையைக் கண்ணார தரிசித்தால், நம் பாவங்கள் அனைத்தும் தொலையும்; புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

புண்ணியம் நிறைந்த ஆடி மாதத்தில், சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில், பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று பிரதோஷ பூஜைகளையும் வழிபாடுகளையும், அபிஷேக ஆராதனைகளையும் தரிசியுங்கள். 

இறையருளையும் குருவருளையும் பெற்று இனிதே வாழலாம். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். உள்ளத்தில் நிம்மதி பரவும்!

இன்று சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷம் (6ம் தேதி வெள்ளிக்கிழமை). இந்த அற்புத நாளில், சிவபெருமானையும் நந்தியெம்பெருமானையும் கண் குளிரத் தரிசித்து மனதாரப் பிரார்த்திப்போம். சுபிட்சம் அனைத்தையும் தந்தருள்வார் தென்னாடுடைய சிவனார்!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top