செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் 'செவ்வாய்" கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற கிழமையாகும்.
செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நன்னாளாகும்.
திருமண தடை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம் நீங்க ஆடி கடைசி செவ்வாய் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது சிறப்பு. பெண்கள் மங்கல கௌரி விரதம் இருந்தால் விஷேச பலன்கள் கைகூடும்.
ஆடி மாத கடைசி செவ்வாய் :
ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில், மறக்காமல் அம்மனை கண்ணார தரிசித்து மனதார வேண்டி கொள்ளுங்கள்.
ராகு கால வேளையில், அம்மனை தரிசித்து செவ்வரளி மாலை சாற்றுங்கள். மேலும், துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி, வழிபடுங்கள்.
ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையில், அம்மனை தரிசனம் செய்வதால் தடைபட்ட மங்கள காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும்.
ஆடி செவ்வாயின் விசேஷம் :
பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகின்றனர்.
செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கள கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
பத்ரகாளி ராகுவாக அவதாரம் செய்தாள் என்பர். செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பதும் நல்லது.