இன்று இரவு சந்திர பகவானை தரிசனம் செய்தால் வேண்டிய வேண்டுதல் உடனே நிறைவேறும்.
பொதுவாகவே மூன்றாம் பிறை அன்று, சந்திர தரிசனம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும். குழப்பமான நிலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு கூட, சுலபமாக தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம்.
இப்படி இருக்க 10-08-2021 இன்று இரவு 7.06 மணியிலிருந்து 7.54 மணிக்குள் சந்திர பகவானை தரிசனம் செய்தால் நம் மனதில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த தினத்தில் சந்திர பகவானை எப்படி முறையாக வழிபட வேண்டும் என்பதைப் பற்றியும், குறிப்பாக எந்த நட்சத்திரக்காரர்கள் இந்த தரிசனத்தை செய்தால் முக்தி பெறும் அளவிற்கு பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய தினம் உங்களால் முடிந்தால் கஷ்டப்படும் ஒருவருக்கு, தானம் செய்யலாம். இன்றைய தினத்தில் செய்யப்படும் தானமானது நூறு மடங்கு பலனைத்தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 7.06 மணியிலிருந்து 7.54 மணிக்குள் உங்கள் வீட்டுல், எந்த இடத்தில் உங்களுக்கு சந்திரதரிசனம் கிடைக்குமோ அந்த இடத்தில் இந்த வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வெறும் கையோடு சந்திர பகவானை தரிசனம் செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பச்சரிசியை சிறிதளவு எடுத்துக்கொண்டு, ஒரு தாம்பாளத் தட்டில் அந்த பச்சரிசியை பரப்பி, அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து, உங்களது இரண்டு கைகளையும் ஏந்தி, அதாவது இரண்டு கைகளையும் சாமி கும்பிடுவது போல மூடிக் கொள்ளக்கூடாது.
உங்களது கை இரண்டையும் விரித்து அந்த இறைவனிடம் வேண்டுதல் வைக்க வேண்டும். அதாவது யாசகம் கேட்பது போல் சந்திர பகவானிடம், இன்று நீங்கள் உங்களது வேண்டுதலை வைத்தால், அதற்கான பலனை கூடிய விரைவில் பெற்றுவிடலாம். நல்ல மனதோடு, நீங்கள் வைக்கும் எந்த ஒரு நல்ல வேண்டுதலாக இருந்தாலும், அது படிப்படியாக வெற்றியை நோக்கி செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
குறிப்பாக ரோகிணி, அஸ்தம் திருவோணம் இந்த மூன்று நட்சத்திரகாரர்கள் தொடர்ந்து ஆயிரம் முறை சந்திர பகவானை, மூன்றாம் பிறை அன்று தரிசனம் செய்து வைத்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் முக்தி கிடைத்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இந்த சந்திர பகவானை நீங்கள் தரிசனம் செய்துவிட்டால் போதும். அந்த ஆயிரம் முறை தரிசனம் செய்த பலனை பெற்றுவிடலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அனைவரும் இந்த சந்திர தரிசனத்தை தவறவிடாமல், வழிபாடு செய்து பலன் பெற வேண்டும்.