கேட்டது கிடைக்க உதவும் முருகன் மந்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கேட்டது கிடைக்க உதவும் முருகன் மந்திரம் பற்றிய பதிவுகள் :

முருகப்பெருமானின் க்ரியா சக்தியாக தேவயானையும், இச்சா சக்தியாக வள்ளியாரும் அமைந்திருக்கின்றனர்.

மூன்றாவது சக்தியான ஞான சக்தி முருகப்பெருமானின் அன்னையார் அருளிய வேலாகும்.

வேலை ஞான சக்தி என்று கூறுவது ஏன் என்றும் வேலுக்கும் அறிவாற்றலுக்கும் என்ன தொடர்பு என்றும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

வேலின் உண்மைப் பொருள் :

தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் தன் கையில் வேல் ஏந்தி இருப்பார். அவர் ஏந்தி இருக்கும் வேல், மேற்பகுதியில் மிகக் கூர்மையாகவும், இடையில் அகலமாகவும், முடிவில் ஆழமாகவும் இருக்கும்.

கூர்மை - அறிவானது கூர்மையாக இருத்தல் வேண்டும். எதிலும் தெளிவாக இருக்க வேண்டும். தெளிவற்ற எண்ணம் வீணானது.

அகலம் - மிகவும் அகன்ற எண்ணம் இருக்க வேண்டும். அனைத்தையும் விரிவான பார்வையில் நோக்க வேண்டும். குறுகிய எண்ணம் கூடாது.

ஆழம் - எதிலும் ஆழ்ந்த எண்ணமும் அறிவும் தேவை. எதைக் கற்றாலும் ஆழமாகக் கற்க வேண்டும். மேலோட்டமான எண்ணமும் அறிவும் பயன்படாது

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே!

நமக்கெல்லாம் அருளை வாரி வழங்கும் குருதேவரான கந்தனுக்கு எத்தனையெத்தனை பெயர்கள். அத்தனை பெயர்கள் இருந்தாலும் அவையனைத்திலும் சிறந்தவை மூன்று பெயர்கள். அவைகள் முருகன், குமரன், குகன். 

அந்த மூன்று பெயர்களையும் அன்போடு உச்சரித்த உடனேயே உள்ளமுருகும். அப்படியெல்லாம் அந்தப் பெயர்களைச் சொல்லி உள்ளம் உருகும் உணர்வினை அருள்வாய் முருகா என்று உருகுகிறார் அருணகிரிநாதர்.

'முருகா, குமரா, குகா!' என்று, மனம் உருகி அழைக்கும் செயலொழுக்கத்தையும் ஞானத்தையும் எப்போது அருள்வீர்? என்று பக்தியுடன் பொருந்தி நிற்கும் வானோரும் இப்பூவுலகத்தினரும் துதித்துப் போற்றும் எட்டு வகையான தெய்வீகக் குணங்களாலாகிய பஞ்சரத்தில் வதியும் மகா குருவாகிய திருமுருகப்பெருமானே!

எட்டு பண்புகள்

1) தன்னடக்கம்
2) துப்புரவு
3) இயற்கை ஆர்வலன்
4) அனைத்துமறியும் ஆர்வம்
5) உணர்ச்சிவசப்படாமை
6) பேரருள்
7) பேராற்றல்
8 )கட்டுப்பாடு.

கேட்டது கிடைக்க உதவும் முருகன்  மந்திரம் :

நான் கேட்டதை மட்டும் இறைவன் ஏன் தருவதே இல்லை என்று சிலர் நினைப்பதுண்டு. அதற்கு காரணம் அவர்களின் பூர்வ ஜென்ம வினையாக இருக்கலாம். கவலையை விடுங்கள் மந்திரத்தை கூறி இறைவனை வணங்குவதன் மூலம் அவர் மனம் மகிழ்ந்து வரம் அளிப்பார். அந்த வகையில் கேட்டது கிடைக்க உதவும் முருகன் மந்திரம் இதோ.

மந்திரம்:

“ஓம் சௌம் சரவணபவ 
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ”

செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் அல்லது மாலையில் குளித்துவிட்டு பின் 6 முதல் 7 மணிக்குள்ளாக பூஜை அறையில் முருகன் படத்திற்கு முன்பு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து பின் இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top