மாதசிவராத்தியும் அவற்றின் பலன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாதசிவராத்தியும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :

சித்திரை:

சித்திரை மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரிகளிலும் ஆயுள் முழுவதும் விரதம் இருந்தால், அங்கங்களின் குறைகள் நீங்கும்; உடலின் குறைகள் நீக்கப்பட்டு, ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

வைகாசி:

வைகாசி மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும்; சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும். நல்ல நட்பை இழந்து விடாதீர்கள் 

ஆனி:

ஆனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்:

ஆடி:

ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்.

ஆவணி:

ஆவணி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை செய்தால் வேதம் ஓதிய பலன் கிட்டும்; பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும்; மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்:

புரட்டாசி:

புரட்டாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,செல்வம் பெருகும்;

ஐப்பசி:

ஐப்பசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால், நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலைய மாட்டோம்; வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம்; அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது;

கார்த்திகை:

கார்த்திகை மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளிலும் பூஜைகள் செய்தால்; கார்த்திகை மாதத்து சிவராத்திரி பூஜையைப் பற்றி விவரிக்க ஒரு 100 ஆண்டுகள் போதாது;

மார்கழி:

மார்கழி மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால், பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்: ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;

தை:

தை மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,நெல் முதலான தானியங்கள் நன் கு விளையும்;அள்ளி வழங்கிய தானப் பலன் கிடைக்கும்;

மாசி:

மாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால், பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான்;கணவன் செய்தால், பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்;

பங்குனி:

பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்; பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும்; அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்து விடுகின்றன.

மானுடப் பிறவி எடுத்த பலன்:

நமது பிறந்த நட்சத்திரமும், சிவராத்திரியும் சேர்ந்து வரும் நாளில் சிவராத்திரி பூஜை, விரதம் இருந்தாலே போதும்; கலியுகத்தில் மானுடப் பிறவி எடுத்தமைக்கான லட்சியத்தை அடைந்துவிட்டதாக அர்த்தம்;

ஒருவேளை பிறந்த நட்சத்திரமும் சிவராத்திரியும் இணைந்து வராவிட்டாலும் கூட, பிறந்த கிழமையும் சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில் கூட சிவராத்திரி விரதம் இருந்து சிவபூஜை செய்வது மிகுந்த புண்ணியம் மற்றும் அளவிடமுடியாத பலன்களை தரும்.

ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top