மாவிளக்கு வழிபாட்டின் தத்துவம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாவிளக்கு வழிபாட்டின் தத்துவம் பற்றிய பதிவுகள் :

மாவிளக்கு வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டு முறைகளில் ஒன்று.

காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.

அரிசி [அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ஸ்வரூபமேயாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே.

வெல்லத்தின் குணம் மதுரம். அதாவது இனிமை. அம்பிகை மதுரமானவள். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.

அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம். நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம். ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.

அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.

நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது. அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்ய வேண்டும்.

பெரும்பாலான வீடுகளில் ஆடி,தை வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.

கோவில்களில் பக்தர்கள் பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவது எல்லா செல்வங்களையும் பெற்று தரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top