சிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம் பற்றிய பதிவுகள் :

திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். அன்றைய தினம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

இறைவனுக்கு உகந்த நட்சத்திரமாக விளங்குவதால் தான் நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று அடைமொழி வழங்கப்பெற்றது.

திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. 

திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்த விரதமாகும். இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். இக்காலத்தில் வைகறையில் சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர். 

மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வருவார்.

சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முக்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும்.

மாதம்தோறும் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று விரதம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கும் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top