விநாயகர் சதுர்த்தி தேதி, முகூர்த்த நேரம், சடங்கு சம்பிரதாயம் மற்றும் சிறப்பம்சம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகர் சதுர்த்தி பற்றிய சிறப்பு பதிவுகள் :

விநாயகர் சதுர்த்தி தேதி, முகூர்த்த நேரம், சடங்கு சம்பிரதாயம் மற்றும் சிறப்பம்சம்

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் சதுர்த்தி திதி விநாயகர் வழிபாட்டிற்கு உகந்தது என்றாலும், ஆவணி மாத சுக்ல பக்க்ஷ சதுர்த்தி திதி மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தியை "விநாயகர் சதுர்த்தி" என்று கொண்டாடுவது வழக்கம்.

பக்தர்கள் துயரைப் போக்கும் விநாயகர், சிவபெருமான் மற்றும் தேவி பார்வதியின் மூத்த மகன் ஆவார். அவரை போற்றும் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்நாள் இந்த ஆண்டு செப்டம்பர் 10 அன்று கொண்டாடப்படவுள்ளது.

விநாயகரை ஸ்தாபிக்கும் நேரம்

இந்தியா முழுவதும் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த பண்டிகையை மிகவும் சிறப்பாகவும் பக்தியோடும் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் விநாயகரின் திருவுருவம் சிலையாக வடிக்கப்பட்டு அந்த சிலைக்கு பாரம்பரிய வழியில் சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெறும்.

விநாயகர் சதுர்த்தி தேதி மற்றும் முகூர்த்தம்

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சுக்ல பக்க்ஷ சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் பார்வதி தேவி ஒரு சிலை வடித்து அதற்கு உயிர் கொடுத்தார். அவரே விநாயகர் என்றும் மூவுலகத்திலும் போற்றப்படுகிறார். 

இந்த ஆண்டு இந்த சதுர்த்தி திதி செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. 

சதுர்த்தி திதி, 10 செப்டம்பர் 2021 நள்ளிரவு 12.18 முதல் 10 செப்டம்பர் 2021, இரவு 09.58 வரை உள்ளது. இருப்பினும் இந்த நாளின் சுப முகூர்த்த நேரம் 10 செப்டம்பர் 2021 , காலை 11.03 முதல் மதியம் 01.33 வரை உள்ளது.

முகூர்த்தம் மற்றும் மூர்த்தி ஸ்தாபனம்

விநாயகர் சிலையை வாங்கி பூஜையில் வைக்க உகந்த நேரம் மதிய நேரம். ஆகவே 10 ஆம் தேதி காலை 11.03 முதல் மதியம் 01.33 வரை விநாயகருக்கான பூஜைகளை செய்யலாம். இந்த நேரத்தில் விநாயகர் சிலையை பக்தர்கள் வாங்கி தங்கள் இல்லத்தில் வைத்து பூஜிக்கலாம்.

பூஜை விதிகள் :

விநாயகரை வழிபடவும், அவருக்கான பூஜை சடங்குகளைச் செய்யவும் முதல் கட்டமாக விநாயகர் சிலையை வாங்கி வீட்டிற்குள் விநாயகரை அழைத்து வர வேண்டும்.

வீட்டின் பூஜை அறையில் சிலையை வைக்க வேண்டும்.

சிலையை இல்லத்தில் வைத்து அதற்கான மந்திரத்தை கூற வேண்டும். பிறகு விநாயகருக்கான பூஜை செய்து, கீர்த்தனைகள் பாடி அடுத்த 10 நாட்கள் விநாயகரை வழிபட வேண்டும்.

அந்த 10 நாட்களும் தினமும் காலையில் விளக்கேற்றி, பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிவித்து, விநாயகரை வழிபட வேண்டும்.

பின்னர் அவருக்கு பூக்கள், பழங்கள் , பிரசாதம் ஆகியவற்றை படைக்கலாம். விநாயகரை "மோதகப் பிரியன்" என்று கூறுவார்கள். அதனால் அவருக்கு பிடித்த மோதகத்தை தயாரித்து அவருக்கு பிரசாதமாக வைக்கலாம் . அல்லது உங்களால் முடிந்த எந்த ஒரு பிரசாதத்தையும் அவருக்கு படைக்கலாம்.

விநாயகர் துதிகளை பாடி அவரை மகிழ்விக்கலாம் .

பின்னர் ஆரத்தி காண்பித்து அவருடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம் .

அதன் பிறகு பிரசாதத்தை எடுத்து உங்கள் வீட்டில் இருப்பவர்கள், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு வழங்கலாம்.

விநாயகர் சதுர்த்தியின் சிறப்பம்சங்கள்:

விநாயகரை பால வடிவத்தில் வழிபடுவார்கள். ஒருவர் வாழ்வில் பல்வேறு வளங்களையும், மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவதற்கு விநாயகரை வழிபடலாம்.

"விக்னம் தீர்க்கும் விநாயகர்" என்று விநாயகரை போற்றுவதுண்டு. ஒருவரின் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் மற்றும் கஷ்டத்தைப் போக்க விநாயகர் வழிபாடு உதவும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top