நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய தானங்கள் பற்றிய பதிவுகள் :

தானம் என்பது தனக்கே இல்லாத நிலை வரும் வரை தருவதாகும். அதுவும் மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. பித்ரு தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்கள், சிறுவயதில் இறந்தவர்கள், பிறந்தவுடன் இறந்த குழந்தைகள், துர்மரணம் ஆனவர்களுக்கு நற்கதி கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்தால் நல்ல பலன்களை அடையலாம்.

கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததற்கு சமம். எனவே, இத்தகைய சிறப்புடைய பசுவிற்கு தங்களால் இயன்றளவு உணவை அளிக்கவும்.

பசுவிற்கு அகத்திக்கீரை அளிப்பதன் மூலம் தானத்திற்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. ஒரு கட்டு அகத்திக்கீரையை உணவாக அளிக்கலாம். வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு அகத்திக்கீரையை அளிக்கலாம்.

தானம் செய்ய ஏற்ற எளிதாக சமைக்கும் வகையில் கத்தரி, அவரை, பீன்ஸ், வெண்டை, உருளை, கேரட், பீட்ரூட், முருங்கை, கோஸ், வாழைக்காய், முழுபூசணி போன்றவற்றை தானம் தருதல் நன்று. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்மவினைகளை போக்கி கொள்ள முடியும்.

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

அன்னம் - வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்

தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்

தீபம் - கண்பார்வை தெளிவடையும்

அரிசி - நமக்கு தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை போக்கும்

நெய் - நாள்பட்ட தீராத நோய்களை போக்கும்

பால் - துக்கம் நீங்கும்

பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்

தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்

நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்

அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் என்பது நம் பிதுர்களையும் மகிழ்விக்கும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிடைக்கும். நமது குலம் தழைக்கும்.

கோதானம்

மஹாளய அமாவாசை 06/10/2021 அன்று கோதானம் செய்வது நன்று. பசுவையும் கன்றையும் மஹாலய அமாவாசை அன்று தானமாகக் கொடுத்தால் மூன்று தலைமுறைக்கு லட்சுமி வாசம் செய்வாள். எந்த தோஷங்கள் இருந்தாலும் அவைகள் எல்லாம் விலகும், திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கும் பல தலைமுறையினால் பாதித்து வரும் பிதுர் தோஷம் நீங்கும், 16 வகையான செல்வங்கள் வீடு வந்து சேரும், தொழில் அபிவிருத்தி அடைந்து அபரீதமான லாபம் கிடைக்கும், அயல்நாட்டில் வேலை கிடைக்கும், கிரகங்களில் ஏற்படும் பாதிப்பு நீங்கும், தீராத கடன்கள் தீர வழி கிடைக்கும், கோதானம் வழங்குபவர்கள் புத்திர தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம், நவக்கிரக தோஷம் நீங்கும், 

Post a Comment

Previous Post Next Post