ஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியார்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியார் பற்றிய பதிவுகள் :

சுமார் 450 வருடங்களுக்கு முன்பு, ஐந்து சகோதரர்கள் தமது பாசம் மிக்க தங்கை நாச்சியாரை ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் செய்து வைத்த சில மாதங்களில் தனது சகோதரர்களை சந்திக்க, தனியே தனது கணவரது கிராமத்திலிருந்து புறப்பட்டிருக்கிறார். வழியில் இருக்கும் காட்டுப்பகுதியில் சில கள்வர்கள் இந்த நாச்சியாரை தவறான எண்ணத்துடன் துரத்தியுள்ளனர்.

வெகுதூரம் ஓடி வந்த நாச்சியார், திடீரென ஆவேசமாகி, நான் பத்தினி என்பது உண்மையானால், பூமித்தாயே என்னை ஏற்றுக்கொள் என்று ஆக்ரோஷத்துடன் கத்த, உடனே பூமி பிளந்து அதற்குள் நாச்சியார் புதைந்துவிட்டார். துரத்திவந்த கள்வர்கள் ஓடிப்போனார்கள்.

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், அந்த இடமானது நடைபாதையாக மாறியது. ஒரு இளம்பெண் தமது பெற்றோருடன் வந்துகொண்டிருக்கும்போது, இந்த இடத்தை நெருங்கியதும், ஆக்ரோஷத்துடன் ஆட ஆரம்பித்திருக்கிறாள். தான் இங்கே இருப்பதாகவும், இனி இந்த கன்னியுடன் இருந்து அருள்வாக்கு சொல்ல இருப்பதாகவும் சொல்ல அன்றிலிருந்து இந்த இடம் கோவிலாகிவிட்டது.

அந்த கன்னிப்பெண் சுமார் 72 வருடங்களுக்கு அருள்வாக்கு சொல்ல, அந்த கன்னிப்ப்பெண்ணின் வாழ்க்கைக்குப் பிறகு, வேறு ஒரு பெண்மணி அடுத்த 30 வருடங்களுக்கு உத்தமி நாச்சியாரின் அருளால் பிறருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக, அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள். 

அவளுக்குப்பின்னர், ஒரு இஸ்லாமியர் ஒருவர் சுமார் 45 வருடங்களாக அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள். தற்போது ஒரு வயதான பெண்மணி அருள்வாக்கு சொல்லி வருகிறார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்,(சில நேரங்களில் மாதாந்திர வெள்ளிக்கிழமைகள்) மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் அருள்வாக்கு சொல்லிவருகிறாள்.

இந்த உத்தமி நாச்சியார், ஸ்ரீவில்லிபுத்தூர் தபால் அலுவலகத்திலிருந்து தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. அதிகமாக பிரபலமாகாத இந்தக் கோவிலுக்கு மனம் வருந்தி நேர்மையாக வாழ விரும்புவோர் மட்டுமே செல்லமுடியும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த உத்தமி நாச்சியாரின் சிலையானது பூமிக்கு மேலே உயர்ந்துகொண்டே வருகிறது என்பது ஒரு அதிசயம் ஆகும். 

இதே போல சில உத்தமிநாச்சியார்களின் கோவில்கள் வெவ்வேறு மாவட்டங்களில் இருக்கின்றன. எங்கள் ஊரில் இருக்கும் எனது அன்னை உத்தமி நாச்சியாரின் பெருமையை வெளிப்படுத்துவதில் யாம் பெருமை கொள்கிறோம்.

நன்றி : கை. வீரமுனி சுவாமிகள்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top