அமாவாசைத் தர்ப்பணமும் பலனும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அமாவாசைத் தர்ப்பணமும் பலனும் பற்றிய பதிவுகள் :

சூரிய கிரகமும் சந்திர கிரகமும் சேர்கின்ற அமாவாசை திதி தர்ப்பண நாள். திங்கட்கிழமை வரும் அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாகாளய அமாவாசை ஆகியவை சிறப்பு அமாவாசை நாட்கள். 

அமாவாசையில் விதிப்படி, சிவ நாமம் ஓதித் தர்ப்பணம் செய்யும் போது முக்தீஸ்வரன் முக்தி அருளி பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், அம்மன், கணபதி, முருகன் முதலிய தோற்றம், பிறப்பு, வளர்ப்பு உள்ள உயிரினம் யாரும் செல்ல முடியாத, எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்ட, முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட முக்தி உலகமான சிவலோகத்தில் சேர்க்கின்றார்.

மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடித்துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள் விதி அது செய்கின்ற மெய்யடியார்க்குப் பதி அது காட்டும் பரமன் நின்றானே
அவ்வுலகத்தே அரன் அடி கூடுவர் அவ்வுலகத்தே அருள் பெறுவாரே  

  - (திருமூலர்) 

தற்பணம் அதனில் சாந்தம் புத்தூர் வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்

 - (திருவாசகம்)
                                                                                                                                              பறக்கின்ற ஒன்று பயன் உற வேண்டில் இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் சிறப்பொடு சேரும் சிவகதி
பின்னைப் பிறப்பு ஒன்று இலாமையும் பேருலகு ஆமே
செத்தார் பெறும் பயன் ஆவது ஏது எனில் செத்து நீர் சேர்வது சித்தினைக் கூடிடில் செத்தார் இருந்தார்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச் செல்லா சிவகதி சென்று எய்தும் அன்றே  

  (திருமந்திரம்)

என்பவை தெய்வீகத் திருமுறை. உயிர் தானாக எங்கும் செல்லாது. செய்வினைக்கு ஏற்ப அது ஈசன் திருவருளால் சொர்கத்தையோ நரகத்தையோ மறு பிறவியையோ மலம் நீங்கி முக்தி பெற்று முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட தனிப் பரம்பொருள் பரபிரும்மம் சத்தியத் தனி நாயகன் இருக்கும் சிவலோகத்தையோ அடைகிறது.

திருவானைக்காவில் ஜம்பு லிங்கத்திற்குப் பந்தல் அமைத்த சிலந்தி இறந்த போது கோச்செங்கண் சோழனாக மறு பிறவி பெற்று ஜம்புத் தீவை ஆண்ட மகா சக்கரவர்த்தி ஆயிற்று. தட்ச யாகத்தில் பரா சக்தி இறந்த பின்னர் அம்பாள் உயிர் பார்வதியாக மறு பிறவி பெற்றது.

திருவானைக்காவில் இறந்த யானை முக்தி பெற்று சிவலோகம் சேர்ந்தது.
 
மச்ச கூர்ம வராக ---- கண்ணன் ஆகிய பல்வேறு திருமால் அவதாரங்கள் பரமேஸ்வரனால் சம்ஹாரம் செய்யப்பட்ட போதும் இறந்த போதும் உயிர் மீண்டும் விஷ்ணு ஆகி வைகுண்டம் சேர்ந்தது.

முருகன் அவதாரமான உக்கிர குமார பாண்டியனும் உப்பூர் ஊமை வணிக மகன் ருத்திர சன்மனும் இறந்த போது உயிர் மீண்டும் முருகன் ஆனது.

முப்புரம் எரிந்த போது மூன்று அசுரர்களும் ஈசனது திருக்காட்சி பெற்று சிவ கணமாகி சிவலோகம் சேர்ந்து துவாரபாலர்களாகவும் குடமுழா வாசிப்பவராகவும் ஆயினர்.

விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம் பொருந்தில் அவன் அடி புண்ணிய லோகம், சிவலோகமே சேர்தலால் முத்தர் பதப்பொருள்.

துரியத்து சத்திய ஞானத் தனிப் பொருள் ஆனந்தம் சித்தின்றி நில்லாச் சிவானந்தப் பேரொளி சுத்தப் பிரமத் துரியம் துரியத்துள் உய்த்த துரியத்து உறு பேரொளியே

 - திருமந்திரம்.

கண்ணனுக்கு முற்பட்ட பரசு ராமன், கோதண்ட ராமன் ஆகியோர் என்ன சொல்லித் தர்ப்பணம் செய்தார்கள் என்ற சிந்தனை இல்லாமல் முன்னோர்களோடும் முன்னோர்க்குச் செய்யப்படும் தர்ப்பணத்தோடும் திவசத்தோடும் (திதி) எந்த சம்பந்தமும் இல்லாத வடநாட்டு முன்னோரான கண்ணன் உள்ளிட்ட அவதார மனிதப் பெயர்களைச் சொல்லிச் செய்தால் பலன் இல்லாதது மட்டுமன்றி நித்யத்வம் நித்ரத்வம் ஆனது போல் துன்பமாகவும் முடியும்.

நன்றி - சிவப்பிரியா

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top