மகாளய அமாவாசை தர்ப்பணம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மகாளய அமாவாசை பற்றிய பதிவுகள் :

மகாளயபட்சம் விரத காலம் புரட்டாசி 4ம் தேதி (செப்டம்பர் 21) தொடங்கி புரட்டாசி 20ம் தேதி (அக்டோபர் 6) வரை ஆகும். இந்த காலத்தில் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத் தலைவனின் கடமை. இந்த பதிவில் யாரெல்லாம் மகாளயபட்சம் காலத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். என்பதை விரிவாக பார்ப்போம்.

நமது சமயத்தில் பல நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது இறை வழிபாடு மட்டுமல்லாமல், முன்னோர்கள் வழிபாடும் ஆகும். இந்த நம்பிக்கைகள் ஒவ்வொருவரின் வாழ்வையும் நல்வழிப்படுத்துவதற்காகப் பின்பற்றப்படுகிறது.

அப்படி வகுக்கப்பட்டிருக்கும் பல நம்பிக்கைகளில் முன்னோர்கள் வழிபாடு ஒவ்வொரு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

மகாளயபட்சம் ஆரம்பம்:

ஒவ்வொரு ஆண்டும், தமிழ் மாதம் ஆவணி பெளர்ணமி முடிந்ததும் மறு நாள் முதல் மகாளய பட்சம் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை அனுசரிக்கப்படுகிறது. (இந்த முறை புரட்டாசி மாத பெளர்ணமிக்கு பின் மகாளயபட்சம் தொடங்கியுள்ளது.)

மகாளய அமாவாசை எப்போது?

அமாவாசை திதி அக்டோபர் 5ம் தேதி இரவு 7.04 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 6ம் தேதி (புரட்டாசி 6) மாலை 5.36 மணி வரை நீடிக்கிறது.

அதனால் அக்டோபர் 6ம் தேதி காலை முதல் மகாளய அமாவாசை கடைப்பிடித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

​முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை

ஒவ்வொரின் தோஷங்கள் நீங்க, இறை வழிபாட்டில் முழு அருளைப் பெற்றிட முன்னோர்கள் வழிபாடு செய்வது அவசியம். யார் ஒருவர் இறை வழிபாடு செய்வதோடு, தன் முன்னோர்களுக்கான கடமைகளை சரியாக வழிபட்டு செய்கிறாரோ அவரின் வாழ்வில் அனைத்து நன்மைகளும் நடக்கும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாடு, அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டியது அவசியம்.


மூன்று முக்கிய அமாவாசை :

மாதம் ஒரு அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை (புரட்டாசி அமாவாசை), தை அமாவாசை மிக விஷேசமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும். இந்த மூன்று முக்கிய அமாவாசை தினத்திலாவது உங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

ஆடி அமாவாசை : பித்ரு லோகத்திலிருந்து பித்ருக்கள் பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம்.

மகாளய அமாவாசை : பித்ருக்கள் பூலோகம் வந்தடைவதாக ஐதீகம்.

தை அமாவாசை : பித்ருக்கள் மீண்டும் பித்ரு லோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம்.

​முன்னோர் வழிபாடு செய்வது எப்படி?

ஒருவர் இறந்த அதே திதியில், அடுத்து வரக்கூடிய காலத்தில் (ஆண்டில்) திதி கொடுப்பதற்கு சிரார்த்தம் என்று பெயர்.

திவசம் (தெவசம்) என்றால் ஒருவர் இறந்தால், அவர் எந்த மாதத்தில், எந்த திதியில் இறந்தாரோ, அந்த மாதம், அதே திதியில் (தசமி திதி என்றால் அந்த மாதம் தசமி திதி) பிராமணரை அழைத்து, திவசத்திற்கான விரிவான சடங்கும், ஹோமமும் வளர்த்து செய்வதாகும்.

தர்ப்பணம் என்பது ஒரு புண்ணிய செயல். ஒவ்வொரு நாளும் செய்யலாம். நீர்நிலையில் நின்று சூரியன், வருணன் என எல்லா தேவர்களை நினைத்து தண்ணீரை அள்ளி விட்டு ‘ஆதித்யா தர்ப்பயாமி’ என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வது தர்ப்பணம் ஆகும்.

தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வது என்று பொருள்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் அமாவாசை தினத்தில் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த தினத்தில் நீங்களே எள்ளும் நீரும் கலந்து உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

இது உங்கள் முன்னோர், ரத்த உறவு சார்ந்தோருக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top