ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஜாதகம் கணிக்கும் முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஜாதகம் கணிக்கும் முறைகள் பற்றிய பதிவுகள் :

நம்மில் பலருக்கு நமது பெற்றோர் நாம் பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து நமக்கு ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள். அந்த ஜாதகத்தை வைத்து நம் வாழ்க்கை எப்படி இருக்கும், தொழில், திருமணம், கல்வி இது போன்ற விஷயங்கள் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஜாதகம் உதவியாக இருக்கும்.

சிலருக்கு அவர்களது பெற்றோர்கள் ஜாதகம் எழுதி வைத்திருக்க மாட்டார்கள். ஆகவே அவர்களுக்கு ஜாதகம் கணித்து சொல்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இருப்பினும் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கை ரேகை வைத்து அவர்களது விதியை தெரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்களது கை ரேகையை வைத்து அவர்களது வழக்கை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். அதாவது ஒருவருடைய கை அமைப்பை வைத்து மிக எளிதாக அவர்களது வழக்கை எப்படி இருக்கும் என்று சொல்லலாம்.

விரல்களின் வகைகள்

உள்ளங்கையில் உள்ள கிரக மேடுகள், ரேகைகள், குறியீடுகள் ஆகியவற்றை கொண்டு கை ரேகை பார்ப்பதில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

கிரக மேடுகள்:

ஒருவரது வாழ்க்கை நன்றாக அமைய சூரிய மேடு, சந்திர மேடு, குரு மேடு, புதன் மேடு என பல ரேகை மேடுகள் உள்ளன. ஆகவே ஒருவரது வாழ்கை சிறப்பாக அமைய அவரது கையின் கிரக மேடுகள் அழகாக இருக்க வேண்டும்.

கைகள் வகை:

அதேபோல் கைகள் சதுரக் கை, சங்கு கை, வட்டக் கை என மூன்று வகை இருக்கின்றது. அந்த கையில் உள்ள மேடுகள் எல்லாம் அழகாக அமைப்பாக அமைந்து இருக்கும் நபர் கைரேகை ஜோதிடத்தில் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக பார்க்கப்படுகின்றார்.

தலைவிதி ரேகை:

7 ரேகைகளின் தலையாய ரேகையின் பெயர் தலைவிதி ரேகை என்று பெயர். அதற்கு மற்றொரு பெயர் சனி ரேகை என்று பெயர். நமது கையின் கீழிருந்து மேலாக நடுவிரலை நோக்கி செல்லும் ஒரு ரேகை தான் கைரேகை ஜோதிடத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

கை ரேகை சேர்க்கை:

ஒருவருக்கு சூரிய ரேகை சரியாக அமைந்து, விதி ரேகை, செல்வாக்கு ரேகை சரியாக சேரும் பட்சத்தில் அவர்கள் செல்வந்தராவதோடு, பிரபலமானவர்களாகவும் ஆக வாய்ப்புண்டு.

உடல் ஆரோக்கியத்தை கணிக்கும் ரேகை:

ஒருவரது தலை ரேகை, இதய ரேகை, ஆயுள் ரேகை ஆகியவை வைத்து அவரது உடல் ஆரோக்கியத்தை கணிக்கலாம்.

இவ்வாறு ஒருவருக்கு ஜாதகம் இல்லாத பட்சத்தில் அவர்களது கை ரேகையை கொண்டு கணிக்கலாம். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top