குபேர மூலையின் பலன்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குபேர மூலையின் பலன்கள் பற்றிய பதிவுகள் :

வடகிழக்கு மூலையை ஈசானி மூலை என்றும் வடமேற்கு மூலையை வாயு மூலை என்றும் கூறுவார்கள். வடமேற்கு மூலைக்கும் மற்றும் வடகிழக்கு மூலைக்கும் இடையில் இருப்பது தான் குபேர மூலையாகும்.

வடக்கு திசை நோக்கிய குபேர மூலையாகியது குபேரர் கடவுளுக்கு உகந்தது. உதாரணத்திற்கு உங்கள் வீடு கிழக்கு நோக்கி இருந்தால் நீங்கள் கிழக்கு பார்த்து நின்று கொள்ளுங்கள். உங்களுக்கு இடப்பக்கமாக உள்ளது வட கிழக்கு மூலை மற்றும் உங்களுக்கு வலப்பக்கமாக உள்ளது தென் கிழக்கு மூலையாகும்
வடகிழக்கு மூலை ஈசானி மூலை, தென்கிழக்கு மூலை அக்னி மூலை, தென்மேற்கு மூலை கன்னி மூலை என்றும், வடமேற்கு மூலை வாயு மூலை என்றும் கூறுவார்கள்.

குபேர மூலை பலன்கள்:

குபேரரை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. அது போல குபேர மூலையில் பீரோவை வைத்தால் செல்வம் பெருகும்.
மேலும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தங்களது‌ காசோலையை குபேர மூலையில் வைப்பதன் மூலம் தொழில் நன்கு வளர்ச்சி அடையும் செல்வமும் பெருகும்.

தொழிலில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் லாபம் பன்மடங்கு அதிகரிக்க குபேரற்கு பாலபிஷேகம் செய்வது சிறந்தது. வியாபாரம் தொய்வு பெறாமல் இருப்பதற்கு வருடத்தில் ஒருமுறை திருவண்ணாமலையில் உள்ள குபேர லிங்கத்தை வழிபடுவது நல்லது.

வீடு அல்லது மனை எது வாங்குவதாக இருந்தாலும் அதை வடக்கு திசை பார்த்து வாங்குங்கள். குபேரர் கடவுளை வியாழக்கிழமையில் வழிபடுவது சிறந்தது. அப்படி வழிபட்டால் பண பற்றாக்குறை வராது. மேலும் ஈசானி மூலை மற்றும் குபேர மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஈசானி மூலையை காலியாக வைத்திருக்க வேண்டும். வற்றாத செல்வம் பெருகுவதற்கு குபேர மூலை சிறந்தது

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top