திங்கட்கிழமை என்பது “சோமவாரம்” என்றழைக்கப்படுகிறது. சிவப்பெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது. இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கள் கிழமையிலிருந்து ஆரம்பித்து, கார்த்திகை மாதம் வரும் திங்கள்கிழமை அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும்.நினைத்த வரம் கிடைக்க 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்வர்.
சோமவார விரதத்தை முதலில் தொடங்க உகந்த நாள் சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். சோமவார விரதத்தை முதலில் தொடங்க உகந்த நாள் சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும்.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. சிவபெருமான் மாதங்களில் கார்த்திகையாக இருக்கிறார் என்பது ஒரு சிலருக்கே தெரியும். ஆம்! கார்த்திகை மாதத்தில் வருகிற பவுர்ணமி, இறைவன் ஜோதி வடிவாகத் தோன்றிய நாளாக வருகிறது. மனிதனுடைய உடலில் ஆறு மாதங்கள் சேரும் கழிவுகளை நீக்கி சுத்தமடையச் செய்ய கார்த்திகை மாதத்திலிருந்து தை மாதம்வரை மூன்று மாதங்கள் புனித நீராடலும் விரதங்களும் தொடங்குகின்றன.
சோம வாரத்தில் கார்த்திகை விரதம் வருவது இன்னும் மகத்துவம் வாய்ந்தது. இந்தநாளில் சிவனாரை வணங்கி, முருகக் கடவுளை வணங்கி, நவக்கிரகத்தை வலம் வருவது தோஷங்கள் அனைத்தையும் நீக்கும். சந்தோஷத்தைப் பெருக்கும்.
சோமவாரம் என்பது திங்கட்கிழமையைக் குறிக்கும். திங்கள் என்றால் சந்திரன். சோமன் என்றால் சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்று. சந்திரனைப் பிறையென சிரசில் சூடிக்கொண்டிருப்பவர் என்பதால் ஈசனுக்கு சோமன் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல் சந்திரசேகரன் என்கிற திருநாமமும் உண்டு.
சந்திர பகவான், நவக்கிரகங்களில் ஒரு கிரகம். 27 நட்சத்திரங்களை மனைவியராகக் கொண்டவர் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த திங்கட்கிழமையில் சந்திர பலம் பெறுவதற்கு, சிவ வழிபாடு செய்யவேண்டிய அற்புதமான நாள்.
மேலும் சந்திர பகவான், மனோகாரகன். நம் மனதை செம்மையாக்குபவன். சீர்படுத்துபவன். குழப்பங்களையெல்லாம் அகற்றி மனதை தெளிவுபடுத்தச் செய்வார். சந்திர பகவானை வணங்குவது வாழ்வில் தெளிவையும் மனோபலத்தையும் தந்தருள்வார்.
திங்கட்கிழமை. சிவனாருக்கு உகந்தநாள். இந்த நன்னாளில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று சிவபெருமானை வழிபடுங்கள். முருகப் பெருமானின் சந்நிதியில், மனதார வேண்டிக்கொள்ளுங்கள். சிவாலயத்தில் உள்ள நவக்கிரக சந்நிதிக்குச் சென்று, நவக்கிரகத்தை ஒன்பது முறை சுற்றி வலம் வந்து வேண்டிக்கொள்ளுங்கள்.
கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். மனோபலம் பெருகும். மனதில் தெளிவு பிறக்கும். சிவனாரையும் சிவ மைந்தன் முருகக் கடவுளையும் சந்திர பகவானையும் ஆத்மார்த்தமாக முழு ஈடுபாட்டுடன் வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டுவதெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள்.