தியானம் ஒரு சிறப்பு பார்வை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ‌தியானம் பற்றிய பதிவுகள் :

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள்.

ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை அல்லது அந்தி மாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி (உங்கள் விருப்பப்டி) உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. 

தியானத்தினால் பல நன்மைகள் அடையமுடியும். தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு இறைவனை அவர்களின் உள்ளதில் ஒளிவடிவில் காணலாம். கோவிலுக்கு சென்று இறைவனை காணவேண்டும் என்ற அவசியம் கிடையாது. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது. 

விஞ்ஞானரீதியாக சொல்ல வேண்டுமானால் நம்முடைய மூளை பீட்டா நிலையிலிருந்து ஆலபா நிலைக்குதள்ளப்படுகிறது. பீட்ட நிலையில் ஒருவனுடைய மூளையின் செயல்திறன் மிகவும் வேகமாக இருக்கும். இதனால் எந்த காரியத்திலும் படபடப்பும் தோலிவியுமே மிஞ்சும். 

நம்முடைய மூளை ஆல்பா நிலைக்கு தள்ளப்படும்போது மூளையின் வேகம் பாதியாக குறைகிறுது. இந்த நிலையில் நம்முடைய சிந்திக்கும் திறனும் நம்முடைய செயல்பாடுகளும் சிறப்பாக அமையும் எடுத்து காரியம் வெற்றியும் அடையும். 

தியானத்தின்போது மனதை ஒருநிலைப்படுத்த முடியாதவர்கள் ஒரு சில மந்திரங்களை மனதிறுகுள் உச்சரிக்கும்போது மனம் சிதறாது. 

ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் தான் தியானத்திற்கு உரிய சிறந்த மந்திரம் ஆகும். தியானத்தின் கோட்பாடு நீ எப்படி நினைக்கிறாயோ அப்படியே ஆகிறாய்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top