சுக்கிரன் தரு​ம் பொது பலன்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சுக்கிரன் தரு​ம் பொது பலன்கள் பற்றிய பதிவுகள் :

ஜோதிடத்தின்படி செவ்வாய் ஆண் தன்மையும், சுக்கிரன் பெண் தன்மையும் உடைய கிரகங்கள். பரிபூரண ஆண் கிரகமான செவ்வாய் முழுமையான பெண் தன்மையைக் கொண்ட சுக்கிரனுடன் இணைவது, சுக்கிரனை முழுக்க முழுக்கப் பலவீனப்படுத்தும்.

அறிவியலின் படி சுக்கிர கிரகம் பிரகாசமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது, மேலும் இது பூமிக்கு மிக அருகில் உள்ளது.

ஜோதிடத்தின் பார்வையில், சுக்கிரன் ஒரு கிரகம், உங்கள் ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்தால் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குகிறது. 

சுக்கிரனால் பெறப்படும் சிறப்பான யோகங்களில் மாளவ்ய யோகம் மிகவும் முக்கியமானது. ஒருவருக்கு சுக்கிரன் லக்ன கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெறுவதால் வரும் யோகம் இது. லக்னம் வலுவிழந்து ராசி வழி நடத்தும் நிலையில் சந்திரனுக்கு கேந்திரங்களிலும் இந்த யோகம் பலன் தரும். ஆனால் லக்ன கேந்திரமே முக்கியமானது.

எந்த லக்னமாக இருந்தாலும் ஒருவருக்கு மாளவ்ய யோக அமைப்பில் சுக்கிரன் அமர்ந்து சரியான பருவத்தில் அவரது தசையும் வருமாயின் சுக்கிரனின் காரகத்துவங்கள் முழுமையாகக் கிடைக்கும். 

சுக்கிரனின் தசையோ, புக்தியோ நடக்கும்போது திருமணம், வீடு, வாகனம் போன்ற அடிப்படைத் தேவைகளை சுக்கிரன் நிறைவேற்றித் தருவார்.

அசுர குரு சுக்ரன் ஆவார். இவர் இகலோக ஆசையை அளிப்பவர். சுக்ரன் விடி வெள்ளி பிரகாஷமாக தெரியும் - இளமையாக இருப்பவர்கள் ஜொலிப்பார்கள் ஆக இளமையும், ரசனையையும் அளிப்பவர். ஆடல் பாடல் முதலான நளின கலைகளுக்கு நாயகன், மனைவியைக் கொடுத்து மகிழ்ச்சிகாரமான இல்லற வாழ்க்கையைத் துவக்கி வைத்துப் பரிபாலனம் செய்வர்.

சுக்ரன் தொழில்

வேஷக்காரன், நடிகர்கள், கலைத்துறைக்காரன்கன், ஒப்பனைப் பொருட்கள், அலங்கார வஸ்த்துக்கள், ஆடம்பர வஸ்துகள், சுக்ரன் என்றால் வெள்ளை என்று பொருள், வெண்மை பொருள்கள் அனைத்துக்கும் காரகன், சுக்கில பட்சம் , வைரம் மிக பிரகாஷம் ஜொலிப்பது போல் எல்லாம் சுக்கிரன் , இளம் பெண் குறிப்பது சுக்ரன், விடியற் காலை பொழுத்தைக் குறிப்பவர் இவர், வான் மண்டலத்தில் விடியல் காலை பொழுதில் சுக்ரன் தெரிகிறார். அதிகாலையில் மனிதனுக்கு காமக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதும் இவர் தான். காமத்துக் காரன் சுக்ரன்.

களத்திரகாரகன் சுக்ரன்

சுக்ரன் இல்லற் வாழ்வுக்குறியவர், சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். உலக வாழ்கையில் இன்பமும் செளபாக்கியங்களையும் சுக போக செளரியங்களையும் தருபவன் சுக்ரன்.   

வாகன வசதிகளை அளிப்பவர் இவர், மிக உயர்ந்த வாகனமா, நடுத்தரமான வாகனமா, கடைசி நிலை வாகனமா, ஒன்றுக்கு மேற்பட்ட வாகனமா என குறிப்பவர் இவர்தான்.

ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவர் இவர். கையில் காசுடையவர்களாய் வைப்பரும், சொந்த வீடு அளிப்பவரும் இவர்தான், கலை உலகில் சிறப்பான நிலையை அளிப்பவர். பெண்களிடம் மோகத்தை அளிப்பவரும், வாழ்நாள் முழுவதும் அதே நினைப்பில் இருக்க வைப்பவர் இவர்தான்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top