பானு ஸப்தமி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பானு ஸப்தமி பற்றிய பதிவுகள் :

ஞாயிற்று கிழமையும் ஸப்தமி திதியும் சேர்ந்து வரும் நாட்கள் பானு ஸப்தமி என்று அழைக்கபடும். 26-12-2021 மற்றும் 09-01-2022 இந்த மாதத்தில் இம்மாதிரி வருகிறது. காயத்திரி ஜபம் காலையில் 8-30 மணிமுதல் 10-30 மணி வரை ஆயிரம் காயத்ரி ஜபம் செய்தால் அது பத்தாயிரமாக இந்த பானு ஸப்தமி அன்று கணக்கில் எடுத்துக்கொள்ள படும். சூரிய கிரஹணத்திற்கு சமமான புண்ய காலம். ஆதித்ய ஹ்ருத்யம், சூரிய கவசம், அருணம், சூரிய ஸ்தோத்ரங்கள் படிக்கலாம். தானங்கள் செய்யலாம்.

தனுர் மாத பூஜை. 16-12-2021 முதல் 14-01-2022 வரை.

தேவர்களுக்கு தக்ஷிணாயனம் இரவு நேரம். உத்தராயணம் பகல் நேரம். . மார்கழி மாதம் விடியற்காலை போது தேவர்களுக்கு.. இந்த விடியற்காலையில் மஹா விஷ்ணுவை எழுப்பி 16 உபசாரம் பூஜை செய்து பொங்கல் படைத்து தினந்தோறும் மிகுந்த பக்தியுடன்

சூரிய உதயத்திற்கு முந்தி ஆராதித்து வருவதால் விஷ்ணு பதவியை பெறுகிறான். இம்மாதத்தில் சிவ பூஜையும் சிறந்ததாகும்.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நக்ஷத்திரதன்று சிவனையும் வழிபடுகின்றோம்.

மார்கழி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி வைகுண்ட ஏகாதசி..இன்று வேத பாராயணத்துடன் விஷ்ணுவிற்கு உத்ஸவம் செய்ய வேண்டும் .

திருவோணம், ஏகாதசி, அமாவாசை, பெளர்ணமி. ஜன்ம நக்ஷத்திரம், மாச நக்ஷத்திரம், ஹரி தினங்களிலும், பக்தர்கள் வரும் போதும் துர்நிமித்தம், , துஸ் ஸ்வப்னம், மஹாபயம் வரும் போதும் மஹா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.

விஷ்ணு பூஜையை விட வேறு விசேஷ வைதீக கர்மாவே கிடையாது. விஷ்ணு ஸூக்தம், புருஷ ஸுக்தத்தை விட வேறு சிறந்த வேத மந்திரம் கிடையாது. ஆகையால் திருமாலை தினந்தோறும் ஆராதிக்க வேண்டும். இதில் அஷ்டாக்ஷரம் பிரதியுப சாரத்திற்கும் உபசார மந்திரமாகும்.

திருமாலை பூஜித்து நமஸ்கரித்து ஆத்ம நிவேதனம் பண்ண தகுந்ததாகும்..

பஞ்சாக்ஷர மந்திரத்தால் பரமேஸ்வரனை ருத்திர மந்திரத்தோடு விஷ்ணு பூஜையில் சொல்லப்பட்டது போல் செய்ய வேண்டியது.

பூமியை பசுஞ் சாணத்தால் மெழுகி முன்னே ப்ரும, விஷ்ணு, சிவலிங்கத்தையும் , தெற்கில் கணபதி, சுப்பிரமணியரும், மேற்கில் சூலமும், வடக்கில் நந்திகேஸ்வரரையும், ஸ்தாபித்து, அர்க்கியம், பாத்யம் கொடுத்து நிர்மால்யத்தை நீக்கி வடக்கே சண்டிகேசுவரரிடம் சேர்ப்பித்து அதன் பிறகு ஸ்நானம், , அலங்காரம், வஸ்த்ரம், தூப தீப நைவேத்ய உபசாரங்கள் எல்லா தேவதைகளுக்கும் செய்து மந்திர புஷ்பம், ஸ்தோத்ரம் ,மற்ற உபசாரங்கள் செய்ய வேண்டியது.. இப்படி செய்வது இஹ பர ங்களுக்கு நன்மை உண்டாகும்..

சிவ லிங்கத்தை தரிசிப்பதே புண்யமானது. . ஸ்பர்சம், அர்ச்சனம், த்யானம் இதை விட ஒவ்வொன்றும் மேலானது.
நூறு முறை பாலாபிஷேகமும், இருபத்தைந்து முறை எண்ணைய் அபிஷேகமும் பழ ரஸங்களால் ஆயிரம் முறை அபிஷேகம் செய்வது மஹா அபிஷேகம் எனப்பெயர்.

வாஸனை சந்தன அபிசேகத்திற்கு கந்தர்வ லோகமும்,, பன்னீர் அபிஷேகத்திற்கு குபேர லோகமும் ,பஞ்சாம்ருத அபிஷேகத்திற்கு முக்தியும் பலனாகும்.

விநாயகர், சூரியன், விஷ்ணு , சிவலிங்கம், அம்பாள் இந்த ஐவரையும் பூஜிப்பவர்,, சூரிய மண்டலத்திலோ, ஹிருதயத்திலோ , ஒரு மேடையிலோ, பிம்பத்திலோ பூஜிக்க வேண்டியது. கிழக்கு முகமான தேவனை, வடக்கு முகமாயிருந்து பூஜிக்க வேண்டும்.

சிலர் ஆசாரத்தில் விடியற்காலை தனுர் மாத பூஜையை அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வரை நிறுத்திக்கொண்டு ஸந்தியாவந்தனம் காயத்ரி ஜபம் செய்து விட்டு, தூபம், தீபம், நிவேதனம், கற்பூர ஹாரத்தி முதலியன செய்து தனுர் மாத பூஜை .நித்ய பூஜை இரண்டும் சேர்த்து ஒரே பூஜையாக செய்கிறார்கள். 

எல்லா கோயில்களிலும் மார்கழி மாதத்தில் மக்களின் நன்மை கருதி விடியற்காலையில் பூஜை செய்ய படுகிறது.

ஆதலால் விடியற்காலையில் எழுந்திருந்து இதயத்தில் பிள்ளையார், சூரியன் விஷ்ணு, சிவன், அம்பாள் ஐவரையும் 16 உபசாரங்களால் மானசீக பூஜை செய்து பலன் பெறலாமே.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top