பிரம்ம முகூர்த்தம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிரம்ம முகூர்த்தம் பற்றிய பதிவுகள் :

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீமத் பாகவதம் 3:20:46 ல் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் முகூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம் அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும்.

இதில் தைத்ரீய பிராஹ்மனத்தில் மூன்றாம் பாகத்தில் 10:1:1 லும், சதபாத பிராஹ்மனத்தில் X 4-2-18.25-27; 3,20; XII 3,2,5 மற்றும் X 4,4,4 லும் பிரம்மமுகூர்த்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. கர்கசம்ஹிதையில் 4:8:19, 4:18:14, 5:15:2, 8:10:7 ஆகிய ஸ்லோகங்களில் பிரம்ம முகூர்த்தம் பற்றியும் அதன் சிறப்பையும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முகூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது.

அவையாவன :

1. ருத்ர முஹுர்த்தம்- 06.00AM – 06.48AM.

2. ஆஹி முஹுர்த்தம்- 06.48am –07.36am.

3. மித்ர முஹுர்த்தம்- 07.36am – 08.24am.

4. பித்ரு முஹுர்த்தம்- 08.24am – 09.12am.

5. வசு முஹுர்த்தம்- 09.12am – 10.00am.

6. வராஹ முஹுர்த்தம்- 10.00am – 10.48am.

7. விச்வேதேவா முஹுர்த்தம்- 10.48am – 11.36am.

8. விதி முஹுர்த்தம்- 11.36am – 12.24pm.

9. சுதாமுகீ முஹுர்த்தம்- 12.24pm – 01.12pm.

10. புருஹூத முஹுர்த்தம்- 01.12pm – 02.00pm.

11. வாஹிநீ முஹுர்த்தம்- 02.00pm – 02.48pm.

12. நக்தனகரா முஹுர்த்தம்- 02.48pm – 03.36pm

13. வருண முஹுர்த்தம்- 03.36pm – 04.24pm.

14. அர்யமன் முஹுர்த்தம்- 04.24pm – 05.12pm.

15. பக முஹுர்த்தம்- 05.12pm – 06.00pm.

16. கிரீச முஹுர்த்தம்- 06.00pm – 06.48pm.

17. அஜபாத முஹுர்த்தம்- 06.48pm – 07.36pm.

18. அஹிர்புத்ன்ய முஹுர்த்தம்- 07.36pm – 08.24pm.

19. புஷ்ய முஹுர்த்தம்- 08.24pm – 09.12pm.

20. அச்விநீ முஹுர்த்தம்- 09.12pm – 10.00pm.

21. யம முஹுர்த்தம்- 10.00pm – 10.48pm.

22. அக்னி முஹுர்த்தம்- 10.48pm – 11.36pm.

23. விதாத்ரு முஹுர்த்தம்- 11.36pm – 12.24am.

24. கண்ட முஹுர்த்தம்- 12.24am – 01.12am.

25. அதிதி முஹுர்த்தம்- 01.12am – 02.00am.

26. ஜீவ/அம்ருத முஹுர்த்தம்- 02.00am – 02.48am.

27. விஷ்ணு முஹுர்த்தம்- 02.48am – 03.36am.

28. த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்- 03.36am – 04.24am.

29. பிரம்ம முஹுர்த்தம்- 04.24am – 05.12am.

30. சமுத்ரம் முஹுர்த்தம்- 05.12am – 06.00am.

மேலே சொல்லியுள்ளவற்றில் 29வதாகச் சொல்லப்பட்டிருப்பதுதான் பிரம்ம முகூர்த்தமாகும். அனைத்து சுப காரியங்களுக்கும் உகந்ததாகும்.

மேலும், 26வது முஹூர்த்தமான ஜீவ/அம்ருத முஹூர்த்தம் மற்றும் 29வது முஹூர்த்தமான ப்ரம்ம முஹூர்த்தம் ஆகியவை இறைவழிபாடு மற்றும் திருமண வைபவங்களுக்கு மிகவும் சிறப்பான முஹூர்த்தங்களாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top