பஞ்சலோக நகைகளின் சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பஞ்சலோக நகைகளின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் துணை புரிகின்றன.

நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், மோதிரம் அல்லது காப்பு ஐம்பொன் உலோகங்கள் முலம், உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது.

நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது.

வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம், உடல்சுறுசுறுப்பு அடைகிறது.

ஐம்பொன் உலோகத்தை அணிந்து அதன் விளைவுகளை நமது ஆன்மீக பெரியோர்களும் , சித்தர்களும் அறிந்ததே என்பதில் ஐய்யமில்லை.

பொதுவாக அனைவரும் தங்கம் ,வெள்ளியில் நகைகள் அணிவது தான்வழக்கம். இதிலுள்ள உட்கருத்துக்கள் என்னவெனில் அந்த உலோகத்தின் சத்துக்கள், சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்.

பஞ்சலோகத்தில் நகைகள் அணிந்தால் அது உடலுக்கு பெரும் பயனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை . நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகிறது . அதாவது மண்ணில் உள்ள இந்த சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும்.

இந்த குறை இயற்கையிலும் இங்கு வசிக்கும் மனிதரின் உடலுக்கும் பிரதிபலிக்கும் . இதை புரிந்து கொண்டதனால் தான் பண்டைய மக்கள் பஞ்சலோகத்தின் உபயோகத்தை பரிந்துரை செய்தனர்.

இதனால்தான் நம் கோயில்கள் அனைத்திலும் பஞ்சலோக சுவாமி சிலைகள் இருக்கின்றன. இதனை பார்ப்பதால் கண்கள் வழியாக அதன் ஒளி ஊடுருவி உடலுக்கு நன்மை தரும்.

பஞ்சலோகத்தின் சக்தி மனித உடலை சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலில் உலோக சக்தியை அதிகரிக்கவும் செய்யும். ஐம்பொன்சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும், என பெரியோர்கள் கருதினர்.

பொதுவாக உடலை பிண்டம் என்போம். பூமி உள்பட பிரபஞ்சத்தை அண்டம் என்போம். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்பது சித்தர் வாக்கு.

இதனை அன்றே உணர்ந்த அறிவுபூர்வமான நமது முன்னோர்கள் தங்கள் உடலில் எப்போதும் இந்த உலோகங்கள் உடலில் இருக்கும் வண்ணம் ஐம்பொன்னை அணிந்தனர். இந்த உலோகங்கள் நமது உடலை அண்டத்துடன் இணைக்கும் மாய வேலையை செய்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

இந்த உலோகங்களை அணிவதால் உலோகத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு ஈர்த்து நாம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை. இந்த ஐம்பொன் ஆபரனகளுக்கு அதிக காந்த ஈர்ப்பு சக்தி உடையது , தங்கம் , வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.

இதில் தங்கம் குருவின் சக்தியையும்,

வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,

செம்பு சூரியனின் சக்தியையும்,

இரும்பு சனியின் சக்தியையும்,

ஈயம் கேதுவின் சக்தியையும் 

வழிபாட்டின் போது ஈர்த்து இழுத்து மக்களுக்கு வழங்கும் இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ , காப்பாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமனப்படும்.

மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது. இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.

ஐம்பொன்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி.
இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும் .

இராஜ உறுப்புகளான இதயம் , மூளை , நுரையீரல் , சிறுநீரகம், கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும், தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் ,இரத்த கொதிப்பை சீராக்கும்.
கைவலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும். நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

இப்படி முன்னோர்கள் கடைபிடித்த எளிய வழிமுறைகளை பின் பற்றி ஐம்பொன் உலோகங்களை அணிந்து உடலை காக்கலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top