ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐவகை பக்தி

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐவகை பக்தி பற்றிய பதிவுகள் :

1) சாந்த பக்தி
2) தாஸ்ய பக்தி
3) ஸக்ய பக்தி
4) வாத்ஸல்ய பக்தி
5) மதுர பக்தி

1) சாந்த பக்தி :

கடவுள் மீதுள்ள பேரன்பினால் உலகப் பொருட்களின் மீது உள்ள ஆசைகளை அடக்கி மனதை எப்பொழுதும் சாந்த நிலையில் வைத்துக்கொண்டு கடவுளையே தியானித்து அவரைக் காணுதல் சாந்த பக்தி.
எடுத்துக்காட்டாக மாணிக்கவாசகர், சம்பந்தர், ரிஷிகள்,முனிவர்கள். 

2) தாஸ்ய பக்தி :

கடவுளை ஆண்டானாகவும் தம்மை அடிமையாகவும் கருதி அவருக்கு எப்பொழுதும் தொண்டு செய்யும் பக்தி தாஸ்ய பக்தி. எடுத்துக்காட்டாக அப்பர் பெருமான்.

3) சக்ய பக்தி :

கடவுளை நெருங்க நெருங்க, அவரது திருவருளால் தன்னை தோழனாகக் கருதி அன்பு செய்தல் சக்ய பக்தி. 
எடுத்துக்காட்டாக சுந்தரர் பெருமான்.

4) வாத்சல்ய பக்தி :

அன்பு முற்ற முற்ற, தன்னை தாயாகவும் இறைவனை தனது குழந்தையாகவும் கருதும் அன்பு உண்டாகிறது. பக்தன், தான் தன் இறைவனைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைக்கிறான். இறைவன் தன்னை காப்பாற்றுகிறான் என்ற நினைவு நழுவிவிடும். இதுவே வாத்ஸல்ய பக்தி. எடுத்துக்காட்டாக கண்ணப்ப நாயனார்.

5) மதுர பக்தி :

நால்வகை அன்பையும் தன்னகத்து அடக்கிக்கொண்டு அவைகளினும் ஆழ்ந்து செல்லும் அன்பு கற்புடைய நங்கைக்கு நாயகன் மீது உண்டாகும் அன்பு ஆகும். ஏனெனில் அதனிடத்து தாயின் தயையும் அடியாள் பணியும் புவிப் பொறையும் நல்ல தோழமையும் இன்னும் நாயகனது இன்பத்திற்கு ஆளாகும் இயல்பும் குடிகொண்டிருக்கும். இது மதுர பக்தி. இந்த மதுர பக்தி நேரடியாக கொள்ளப்படுவது இல்லை.

Post a Comment

1 Comments
Post a Comment
To Top