ஆலயங்களில் அமைக்கப்பட்டிருக்கும் விக்ரகங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆலயங்களில் அமைக்கப்பட்டிருக்கும் விக்ரகம் பற்றிய பதிவுகள் :

ஆலயங்களில் அமைக்கப்படும் இறைவனின் விக்கிரகங்களில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. அவை

1. சவுமியம்
2. போகம்
3. யோகம்
4. உக்கிரம்

சவுமியம்

புன்சிரிப்புடன் அழகே உருவாக வீற்றிருக்கும் சிலைகள். இராஜராஜேஸ்வரி, பார்த்தசாரதி, மீனாட்சி அம்மன், தேவராகப் பெருமான், காமாட்சி அம்மன் போன்ற விக்கிரகங்கள் சவுமிய (சாந்தம்) வகையைச் சார்ந்தது.

போகம்

தன் மனைவியுடன் சேர்ந்து ஒரே பீடத்தில் நின்றபடி அல்லது அமர்ந்தபடி அருள் பாலிக்கும் விக்கிரகங்கள், போக மூர்த்தி (மேலான ஆனந்தத்தை அளிப்பவர்கள்) என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக மனைவியுடன் இருக்கும் இராதாகிருஷ்ணன், சீதாராமன், இலட்சுமி நாராயணன், உமா மகேஸ்வரர், வள்ளி– தெய்வானை சமேத சுப்பிரமணியர் போன்ற விக்கிரகங்கள்.

யோகம்

தியான நிலையில் காட்சிதரும் விக்ரகங்கள். யோக நரசிம்மர், ஐயப்பன் போன்ற விக்கிரகங்கள் யோக மூர்த்திகளாவர்.

உக்கிரம்

கோபத்துடன் காட்சியளிக்கும் காளி தேவி, துர்க்கை அம்மன், வீரபத்திரர், உக்கிர நரசிம்மர், சாமுண்டீஸ்வரி போன்ற விக்கிரகங்கள், உக்கிர மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top