சந்திர வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சந்திர வழிபாடு பற்றிய பதிவுகள் :

நம்முடைய வாழ்க்கை முழு நிலவு போல பிரகாசமாக இருக்க, அழகாக இருக்க, வெளிச்சத்தோடு இருக்க, தோல்வி நம் பக்கம் தலை வைத்து படுக்காமல் இருக்க, வெற்றியை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள கட்டாயமாக அந்த சந்திர பகவானின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். 

இந்த சந்திர பகவானின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு திங்கட்கிழமைகளில் நாம் செய்ய வேண்டிய ஒரு பூஜை உள்ளது. அதை மட்டும் வாரம் தோறும் தொடர்ந்து செய்து வருபவர்கள். உடைய முகத்தில் அழகு அதிகரிக்கும். அறிவுத்திறன் கூடும். வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் வரத் தொடங்கும்.

இந்த உலகமே அந்த சந்திர பகவானே பார்த்து வியக்கிறது. அதேபோல் உங்களுடைய வாழ்க்கையும், அடுத்தவர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு சந்தோஷமாக வெற்றிகரமாக அமையும்.

இந்த பூஜையை செய்வதற்கு கட்டாயமாக சந்திர பகவானின் எந்திரம் உங்களுடைய வீட்டில் இருக்க வேண்டும். இந்த எந்திரம், எந்திரங்கள் விற்கக்கூடிய கடைகளில் கட்டாயமாக கிடைக்கும். அப்படி இல்லை என்றால் இணைய தளங்களிலிருந்து டவுன்லோட் செய்து பிரின்ட் அவுட் எடுத்து உங்களுடைய வீட்டில் ஒட்டி வைத்துக்கொள்ளலாம். இந்த எந்திரத்தை பூஜை அறையில் தான் ஒட்டி வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.

உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஒட்டி வைத்தும் வழிபாடு செய்தாலும் நன்மையைத் தரும். பூஜை அறை வசதி இருப்பவர்கள் இந்த எந்திர படத்தை, பூஜை அறையில் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ஒரு சிறிய மண் அகல் விளக்கில் கொஞ்சமாக நெய் ஊற்றி, வெள்ளை நிறத்தில் இருக்கும் பஞ்சுத் திரிபோட்டு, தீபம் ஏற்றி சந்திர பகவானுக்கு வெள்ளை நிற கற்கண்டுகளை பிரசாதமாகப் படைத்து, முடிந்தால் நீங்களும் வெள்ளை நிற ஆடை அணிந்து, அந்த எந்திரத்தின் மூலமாக சந்திர பகவானை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

தீபம் ஏற்றி நிவேதனம் வைத்து வைத்து அதன் பின்பு அந்த எந்திரத்தின் முன்பு அமர்ந்து ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து உங்களுடைய வேண்டுதலை சந்திர பகவானிடம் சொல்லிப் பாருங்கள். அன்றிலிருந்து உங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் வரத் தொடங்கிவிடும். வாரம்தோறும் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று மட்டும் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய வாழ்க்கையே அழகாக மாறிவிடும்.

தொடர்ந்து 11 வாரங்கள் இந்த பூஜையை செய்து பாருங்கள். வாழ்க்கையில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களை. தேய்பிறையில் சந்திர பகவான் தேய்வதும், வளர்பிறையில் சந்திர பகவான் வளர்ந்து முழு நிலவாக இந்த பூமிக்கு பிரகாசமான ஒளியை கொடுப்பதும் இயற்கைதான். இதேபோல் உங்களுடைய வாழ்க்கையிலும் சில ஏற்றத்தாழ்வுகள் வரத்தான் செய்யும். அதை அனைத்தையும் தாண்டி, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டும் என்றால் சந்திர பகவானின் வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து பலன் பெற வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top