சைவசித்தாந்தம் குறிப்பிடும் நால்வகைச் சமயத்தார்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சைவசித்தாந்தம் குறிப்பிடும் நால்வகைச் சமயத்தார்கள் பற்றிய பதிவுகள் :

1. புறப்புறச்சமயத்தார் :

 உலோகாயதர், மாத்தியமிகர், யோகாசரார், செளத்திராந்திகர், வைபாடிகர் என்னும் நால்வகைப் பெளத்தர், ஆருகதர் (சமணர்) ஆகிய அறுவருமாம். இவர் வேதம் சிவாகமம் இரண்டையும் நிந்திப்பவர்.

2. புறச்சமயத்தார்

தார்க்கிகர், மீமாஞ்சகர், ஏகான்மவாதிகள், சாங்கியர், யோகமதத்தினர், பாஞ்சாாத்திரிகள் என்னும் அறுவருமாம். 

இவர் வேதத்தைப் பிரமாணமாகப் பொதுவகையாற் கொண்டு சிவாகமங்களை நிந்திப்பர். தார்க்கிகர் வேதத்தை நேரே பிரமாணமாகக் கொள்ளாது வேதப் பொருளோடு மாறுபட்டுப் பொருட்டன்மை கொள்வர். 

மீமாஞ்சகர் வேதத்தின் கன்ம காண்டத்தைப் பிரமாணமாகக் கொண்டு ஞானகாண்டத்தை இகழ்வர். ஏகான்மவாதிகள் ஞானகாண்டத்தை மாத்திரம் பிரமாணமாகக் கொண்டு கருமகாண்டத்தை இகழ்வர். ஏனை மூவரும் தத் தம் மதத்திற்கு வேண்டுவனவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணங் கொள்ளாது வேதத்துக்குப் புறமாகிய நூல்களைப் பிரமாணமாகக் கொள்வர்.

3. அகப்புறச்சமயத்தார்

பாசுபதர், மாவிரதர், காபாலர், வாமமதத்தினர், வைரவமதத்தினர், ஐக்கியவாதசைவர் என்னும் அறு வருமாம். 

இவருள்ளே பாசுபதர் முதலிய ஐவரும் வேதம் சிவாகமம் இரண்டையும் பொது வகையாற் பிரமாணமாகக் கொள்ளினும், அவ்வேதம் சிவாகமம் இரண்டிற்கும் வேறாகிய பாசுபதம் முதலிய நூல்களைச் சிறப்புவகையாற் பிரமாணங் கொள்வர். ஐக்கியவாத சைவர் வேதம் சிவாகமம் இரண்டையும் சிறப்புவகையாற் பிரமாணமாகக் கொண்டு அவற்றில் விலக்கியவற்றை நீக்கி விதிக்கப்பட்டவற்றைச் செய்வாராயினும், ஆணவமலம்ஒன்று உளது என்பதை மறுத்து அதனுண்மையைச் சாதிக்குஞ் சிவாகமங்களை இகழ்வர்.

 இங்ஙனம் இம்மூவகைச் சமயத்தாரும் வேதாகமங்களை நிந்திப்பவராகையால், அவருக்குச் சைவசித்தாந்தமாகிய இந்நூலிற் சொல்லப்படும் பதி, பசு, ஆணவமலம், கன்மமலம், சுத்தமாயை, அசுத்தமாயை என்னும் ஆறு பதார்த்தங்களின் இயல்பைத் தெரிவித்தாலும் உணரமாட்டார்.

4. அகச்சமயத்தார் : 

பாடானவாத சைவர், பேதவாத சைவர், சிவசமவாத சைவர், சிவசங்கிராந்தவாத சைவர், ஈசுவரவவிகாரவாத சைவர்,சிவாத்துவித சைவர் என்னும் அறுவருமாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top