யோக நரசிம்மர் விரதமும் அதனால் கிடைக்கும் பலன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து யோக நரசிம்மர் விரதமும் அதனால் கிடைக்கும் பலன்களும் பற்றிய பதிவுகள் :

குழந்தையை சீர்திருத்திட சீற்றம் கொள்ளும் தாய் ஒரே நொடியில், கோபம் தணிந்து, குழந்தையைக் கொஞ்சிப் பராமரிக்கிறாள். இது போலவே தான், இரண்யனைத் திருத்த, உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார்.

விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தக்ஷிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.

நரசிம்ம ஜெயந்தி விரத முறை ஏகாதசி விரத முறையை ஒத்தது ஆகும். இந்நாளில் பகவான் நரசிம்மரை அவர் தோன்றிய சந்தியாகாலத்தில் , அதாவது பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6) இவரை விரிவாக பூஜிக்க வேண்டும்.

நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு.

பகவான் நரசிம்மரை வழிபடுவதால் நமது ஆன்மீகப் பாதையில் உள்ள தடைகளை நீக்கி ஞானத்தை வழங்க வல்லவர். அது மட்டுமின்றி, அனைத்து விதமான தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்க வல்லவர்.

நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளில் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top