நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாசி மகம் பற்றிய பதிவுகள் :

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.

மகம் ஜெகம் ஆளும் என்பது பழமொழி. சிம்ம ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன் என்பதால், இந்த நட்சத்திரத்திற்கு ஆளுமை தன்மை அதிகம். 

மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். மோட்சகாரகன் எனப்படும் கேதுவின் மகம் நட்சத்திரத்தில், சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மாசி மகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கையை வாழ்வோம்.

மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். மேலும் சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தெப்பத்தில் மாசி மகத் திருவிழா, மகாமகம் விழாவாக மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அப்படி அவர் சிம்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய ஆண்டில் வரக்கூடிய மாசி மகம் நட்சத்திரத்தன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவங்களிலிருந்து விடுபட வைக்கும் என்பது நம்பிக்கை. பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாக ஐதீகம். இந்நாளில் கடலில் நீராடி இறைவனை வழிபடுவதாலும் நற்பேறு பெறலாம்.

பெளர்ணமியுடன் கூடிய மாசி மகம் திதி 16.02.2022 அன்று புதன்கிழமை மாலை 4.13 மணிக்கு வருகின்றது. பின்னர் 17.02.2022 வியாழக்கிழமை மாலை 5.12 மணி வரை உள்ளது. அதனால் மாசி 5ம் தேதி ஜனவரி 17 அன்று மாசி மகம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

Post a Comment

Previous Post Next Post