அபிஷேகப் பொருள்களும், அவற்றின் பலன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அபிஷேகப் பொருள்களும், அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :

திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது நம்மால் முடிந்த எதாவது பூஜைப் பொருட்களையோ, அல்லது நம் வசதிக்கேற்ப தூய புஷ்பங்கள் மற்றும் நல்ல எண்ணெய் மற்றும் நல்ல நெய்யாவது சமர்ப்பித்து வழிபடுவார்கள் என்பது மரபு. தெய்வத் திருமேனிகளுக்கான அபிஷேகப் பொருள்கள், அவற்றின் பயன்கள் பற்றிப் பார்ப்போம்.

1. கந்த தைலம் - இன்பம்

2. மாப்பொடி - கடன் நீக்கம்

3. மஞ்சட்பொடி - அரச வசியம்

4. நெல்லிப்பருப்புப்பொடி - பிணிநீக்கம்

5. திருமஞ்சனத்திரவியம் - பிணிநீக்கம்

6. ரசபஞ்சாமிர்தம் - முக்தி

7. பழபஞ்சாமிர்தம் - முக்தி

8. பால் - ஆயுள் விருத்தி

9. பஞ்சகவ்யம் - சுத்தம், சகல பாவநீக்கம்

10. இளவெந்நீர் - முக்தி

11. தேன் - சுகம், சங்கீத குரல்வளம்

12. இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்

13. சர்க்கரைச்சாறு - பகைவரை அழிக்கும்

14. கரும்புச்சாறு - ஆரோக்கியம்

15. தமரத்தம் பழச்சாறு - மகிழ்ச்சி தரும்

16. எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்

17. நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி ஆகும்

18. கொழுச்சிப் பழச்சாறு - சோகம் போக்கும்

19. மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்

20. அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்

21. வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்

22. தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) - ஞானம் தரும்

23. பன்னீர் - குளிர்ச்சி தரும்

24. விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்

25. தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்

26. ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்

27. சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்

28. கோரோசணை - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்

29. ஜவ்வாது - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்

30. புனுகு - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்

31. பச்சைக் கற்பூரம் - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்

32. குங்குமப்பூ - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்

33. தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்

34. சங்காபிஷேகம் - சகல பாரிஷ்டம் கிட்டும்

35. ஸ்நபன கும்பாபிஷேகம் - சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top