கோவில்களில் கருவறைகளில் காணப்படும் விக்கிரகங்கள் அனைத்தும் கருங்கல்லில் மட்டுமே காணப்படுவதை நாம் பார்க்கலாம்.
இதற்கான காரணம், மற்ற உலோகங்களை விட கருங்கல்லுக்கு எந்த பொருளையும் தன் வசம் கிரஹித்துக்கொள்ளும் தன்மை அதிகம்.
இதைத் தவிர பஞ்ச பூதங்களின் தன்மை கருங்கல்லில் அதிகம் உள்ளது என்பதே உண்மையான காரணம். மற்ற உலோகங்களில் இத்தகைய அம்சங்களோ, தன்மையோ கிடையாது.
ஆகாயத்தைப்போல வெளியில் உள்ள சப்தத்தை தன்னகத்தே இழுத்து, ஒடுக்கி பின்னர் அதனை வெளியிடும் தன்மை கருங்கல்லுக்கு உண்டு.
காற்று, நீர், நெருப்பு, நிலம், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் கருங்கல்லிலே அடங்கியுள்ளது. எனவே தான், பஞ்ச பூத வடிவான பகவானை கருங்கல்லிலே வடிவமைத்து பூஜை செய்வது நமது மரபானது.
இந்த விக்கிரகங்களே வழிபாடு செய்பவர்களுக்கு அருளாசி வழங்கும் தெய்வங்களாக நாம் வழிபடுகிறோம்.