இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2022 ஏப்ரல் 30 அன்று நிகழும். இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழ்கிறது.
சூரிய கிரகணம் 12 ராசிக்கும் வெவ்வேறு பலன்களை தரும். சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இருக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரிய கிரகணம் மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
சூரிய கிரகணத்தின் போது எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-
மேஷம் -
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷ ராசியில் நடைபெறுகிறது. எனவே இது உங்கள் ராசிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், மன உளைச்சலுக்கு ஆளாகலாம். எதிரிகள் ஆதிக்கம் செலுத்தலாம். வாகனத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள், இல்லையெனில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. சூரிய கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்கவும்.
கடகம் -
கடகத்தை ஆளும் கிரகம் சந்திரன். சூரிய கிரகணத்தின் போது சந்திரன் ராகுவுடன் மேஷ ராசியில் இருப்பார். இந்த நிலை கடக ராசிக்காரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். தெரியாத பயம் மற்றும் எதிர்மறை ஆதிக்கம் செலுத்தும். இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கும். பொறுமையாக இருப்பது நல்ல பலன் தரும்.
விருச்சிகம் -
விருச்சிக ராசிக்காரர்கள் கௌரவ இழப்பை சந்திக்க நேரிடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். வீண் சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும். எதிரி தரப்பிலிருந்து சேதம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.
சூரிய கிரகணத்தின் விளைவுகள் மற்றும் பரிகாரங்கள் :
இந்த மூன்று ராசிக்காரர்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போது உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்து தானம் செய்யுங்கள்.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை :
தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம். கி சட்டரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களிலும் கதவுகளும் மூடப்பட்டிருக்கும். கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும். கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனா, கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.
இந்த சூரிய கிரகணம் ஏப்ரல் 30 சனிக்கிழமை மதியம் 12:15 மணிக்கு தொடங்கி மே 1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:07 வரை நீடிக்கும்.
இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் அட்லாண்டிக், அண்டார்டிகா, தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.