பங்குனி வசந்த ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பங்குனி வசந்த ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

அனாதி காலமாகவே ஶ்ரீவித்யா ஸம்ப்ரதாயத்தில் அம்பாள் உபாஸனை விளங்கிய பூமி. ஸாக்ஷாத் ஶ்ரீமஹாவிஷ்ணு தன் தேஹத்தில் விளங்கிய ஆபரணங்களைக் கழற்றி அம்பிகையை உபாஸித்த மஹத்தான பூமி. 

மஹாவிஷ்ணு அம்பாளை உபாஸித்த வரலாற்றை தந்த்ரங்கள் விஷேஷமாகக் கூறுகிறது. ஷட்கூடா எனும் மஹாவித்யையை பகவான் மஹாவிஷ்ணு பரதேவதாநுக்ரஹத்தாலே அடைந்தார். லோபாமுத்ரை உபாஸித்த ஹாதி வித்யையையும், நந்தீஶர் உபாஸித்த ஸாதி வித்யையையும் இணைத்து ஶ்ரீமஹாவிஷ்ணுவானவர் அம்பாளை ஶ்ரீஷட்கூடேஶ்வரி எனும் மஹாவித்யையாக உபாஸித்தார் என்பது தந்த்ர ப்ரமாணம்.

ஸௌந்தர்யலஹரி நான்காவது ஸ்தோத்ரத்திலும், அதற்கு பாஷ்யங்களான லக்ஷ்மீதரா, ஸௌபாக்யவர்த்தினி, ஆனந்தகிரீயம் முதலியவைகளில் இவ்விஷயம் குறிக்கப்பட்டுள்ளது. இது விஷ்ணு வித்யா என்றும் ஆறு கூடங்களைக் கொண்டதால் ஷட்கூட வித்யா எனும் விஷேஷமாகக் கூறப்பெறும்.

அபிராமஸுந்தரி ஸாக்ஷாத் மஹாகாமகலேஶ்வரி. இந்த விஷயத்தை ஸாக்ஷாத் ஶ்ரீஅபிராம பட்டர், ஐம்பத்திமூன்றாவது செய்யுளிலே ஸூக்ஷ்மமாகக் கூறுவார்.

ஸௌந்தர்யலஹரியில் ஸூக்ஷ்மமாக "ஹரிஸ்த்வாம் ஆராத்ய ப்ரணத ஜன ஸௌபாக்ய ஜனனீம்" என்று ஈங்காரத்தை விஷேஷமாகக் கூறுகிறது. அந்த ஈங்காரமே ஷட்கூடவித்யைக்கு ஆதாரம். 

ஈங்காரம் அம்பாளை தானாக பாவிக்கும் பாவனோபாஸனையைக் கூறுகிறது. மஹாவிஷ்ணு தன்னையே அம்பாளாய் பாவித்து தான் மோஹினி ஸ்வரூபத்தை அடைந்தார். அதனால் விஷ்ணுவிற்கும் அம்பாளுக்கும் பேதமில்லை என்பதையும் ஸாஸ்த்ரங்கள் கூறும்.

அபிராமி பட்டர் ஶ்ரீவித்யோபாஸகர் என்பது அந்தாதியில் ப்ரத்யக்ஷமாகவே தெரியும். இந்த ஷட்கூட வித்யைக்கு ஆதாரமான ஶ்ருங்காரகலாக்ஷரத்தின் த்யானத்தைத் தான் பட்டர் ஐம்பத்தமூன்றாவது செய்யுளிலே கூறுகிறார்.

காதி வித்யையிலே விளங்கும் ஶ்ரீஷோடஷாக்ஷரி போல், ஸாதி வித்யையிலே விளங்கும் ஶ்ரீஅஷ்டதசாக்ஷரி போல், இந்த ஷட்கூடேஶ்வரி மிகவுயர்ந்தது.

அந்த ஷட்கூடவித்யேஶ்வரி ஸாக்ஷாத் ஶ்ரீஅபிராமஸுந்தரி. மத்யார்ஜுனம் ஶ்ரீப்ருஹத்ஸுந்தரகுசாம்பாளும் கூட ஷட்கூட வித்யைக்கு அதிஷ்டாத்ரி என்பதும், சிறிது காலம் முன் வரை கூட ஶ்ரீப்ருஹத்ஸுந்தர ஸ்தனாம்பாளுக்கு நித்யம் ஶ்ரீலலிதா த்ரிஶதி அர்ச்சனை நடைபெற்றது என்பதும் அறியப்படவேண்டியது.

அபிராமஸுந்தரியை விஶேஷமாக த்வாதச ஶ்ரீவித்யோபாஸகர்களும் உபாஸித்த விஷயத்தைப் பட்டர் "ஆதித்தன் அம்புலி" எனும் செய்யுளில் கூறுவார்.  

அபிராமஸுந்தரியின் ஆலயம் ஶ்ரீசக்ராகாரமே என்பதும் முக்யமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது. ஶ்ரீயந்த்ர த்ரிகோணேஶ்வரியாக, ஶ்ரீலலிதையாக மஹாத்ரிபுரஸுந்தரியாக விளங்கும் ஶ்ரீஅபிராமஸுந்தரியின் கும்பாபிஷேக ஸமயமான இந்த ஸந்தர்ப்பத்தில் ஶ்ரீசக்ரராஜ நிகேதனையான அம்பிகையின் பாதத்தை சரணாகதி அடைவோம்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top