வியாபாரம் சிறக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வியாபாரம் சிறக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றிய பதிவுகள் :

தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அதில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும், தொழிலில் மேலும் மேலும் முன்னேற்றம் அடையவும் எப்பொழுதும் அதிகாலையில் எழும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் அனைத்து அதிர்ஷ்டங்களையும் ஈர்த்து கொடுக்கக்கூடிய இந்த சக்தி வாய்ந்த முடிச்சை வீட்டிலும் நீங்கள் தொழில் செய்யும் இடங்களிலும் கட்டி வைத்தால் குபேர சம்பத்து ஏற்படும் என்கிற ஐதீகம் உண்டு. 

எத்தகைய தொழிலிலும் சிறப்புற விளங்க பிரம்ம முகூர்த்தத்தில் எழும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும் என்கிறது ஆன்மீகம். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரத்தை ஆரம்பித்தால் தடைகள் இல்லாத, தோல்விகள் இல்லாத நல்ல முன்னேற்றமான விருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. கடை வைத்திருக்கும் பலரும் அதிகாலையில் எழும் பழக்கத்தை கொண்டு இருப்பவர்கள் தான்.

இப்படி பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சனிக்கிழமைகளில் இந்த ஒரு முடிப்பை வாரம் ஒருமுறை செய்து வாசலில் கட்டி வந்தால் அள்ள அள்ள குறையாத செல்வமும், குபேர சம்பத்தும் ஏற்படும் என்பது சூட்சும குறிப்பாகும். 

சிவப்பு என்பது செவ்வாய் பகவானுக்கு உரிய நிறமாக இருப்பதால் சிவப்பு நிறத் துணி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதை சனிக்கிழமையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து செய்வது மிகவும் சிறப்பானது ஆகும். அப்படி பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியாதவர்கள் சனிக்கிழமையில் நல்ல நேரத்தில் செய்யலாம். 

சிகப்பு நிற துணியில் 5 ஏலக்காய், 5 கிராம்பு, ஒரு துண்டு பச்சை கற்பூரம், 5 துளசி இலைகள், சிட்டிகை அளவு மஞ்சள்தூள் சேர்த்து கட்டி வைக்க வேண்டும். பின்னர் இதை உங்கள் வீட்டில் ராசியானவர் யாரோ அல்லது உங்களுடைய குடும்ப தலைவி கைகளில் கொடுத்து வியாபார ஸ்தலங்களில் வாசலில் கட்டி வைக்கலாம். வீட்டிலும் இது போல் செய்து வைக்கலாம். 

பெருமாள் கோவில்களில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் கிராம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம், துளசி இலைகள் சேர்த்து கொடுக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இதனால் இதே போல நாம் செய்து வைக்கும் பொழுது பன் மடங்கு லாபத்தை அள்ளலாம். அது மட்டுமல்லாமல் நீங்கள் உங்களுடைய லாபத்தில் ஒரு பகுதியை பெருமாள் கோவில் உண்டியலில் சேர்ப்பது கட்டாயம் நல்ல பலன்களைக் கொடுக்கும். 

எனவே லாபத்தில் ஒரு பங்கை கொடுக்கிறேன் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியை நீங்கள் காண்பீர்கள்.

சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விளக்கு ஏற்றி வைத்து, ஒரு துளசி மாலை சாற்றி வாருங்கள். மேலும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தானம் செய்ய மகத்தான வாழ்வு கிடைக்கும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே சனிக்கிழமைகளில் இந்த ஒரு விஷயத்தை செய்து முடித்த பின்பு ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அங்குள்ள அர்ச்சகரிடம் கோவில் விளக்கு ஏற்றக் கூடிய எண்ணெய் உங்களால் முடிந்த அளவிற்கு காசு கொடுத்து வாங்கி தானம் செய்யுங்கள். நீங்கள் கொடுக்கும் எண்ணெயிலிருந்து மூலவருக்கு மற்றும் கோவிலில் விளக்கு ஏற்றும் பொழுது உங்களுக்கு ஏற்றமான வாழ்வு அமையும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top