சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறைகள் பற்றிய பதிவுகள் ‌:

சஷ்டி விரதம் என்றால் என்ன:

கந்த சஷ்டி விரதம் என்பது முருகப்பெருமான் அசுரனை அளித்ததை சைவ சமயத்தவர்கள் பெரும் விழாவாக கொண்டாடுவது சஷ்டி விரதம். சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் முதல் 12 நாட்கள் என்பார்கள். இந்த விரதத்தை மேற்கொள்பவர்க்கு குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அகப்பையில் கரு உண்டாகும் என்பதும் ஒரு காரணம். இதனை பெண்கள் மட்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை இது எல்லாருக்கும் நல்ல பலனை தரும்.

சஷ்டி விரதம் நன்மைகள்:

பொதுவாக விரதம் என்றால் பெண்கள் அதிகம் ஈடுபாடுடன் செய்வார்கள். ஆனால் இந்த சஷ்டி விரதம் ஆண்கள், பெண்கள் இருவரும் இருப்பார்கள், முக்கியமாக குழந்தை இல்லாத பெண்மணிகள் இந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் மிக விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது உண்மை. 

அதுமட்டுமில்லாமல் குழந்தை இல்லாத கணவன் மனைவி இருவரும் இந்த கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடித்தால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த விரதம் குழந்தை இல்லாத பெண்களுக்கு பிறகு இந்த விரதத்தை கல்யாண வயதில் உள்ள பெண்கள் அல்லது அந்த பெண்ணுடைய அம்மா இந்த விரத்தை செய்யலாம்.

அதுபோல் வீட்டில் இருக்கும் யாருக்காவது உடல்நிலை சரி இல்லை தொடர்ந்து இதுபோல் உடல் பிரச்சனை கோளாறுகள் வந்தால் இந்த விரதத்தை மனநிறைவோடு செய்யுங்கள் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வீட்டில் அமைதி இல்லை எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் சந்தோசம் இல்லை அப்படி இருக்கிற வீட்டில் அந்த வீட்டில் பெண்கள் இந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கலாம். அவர்களுக்கு நலன் பலன் கிடைக்கும்.

விரதம் இருந்தால் இறைவன் உள்ளத்தில் குடி கொள்வான் என்று பொருள் உண்டு.
பொதுவாக சஷ்டி விரதம் இருப்பவர்கள் முழு வேலை விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. முழு வேலை விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேலை சாப்பிடாமல் அதற்கு பதிலாக பால், பழம் போன்ற பொருட்கள் சாப்பிடலாம். நம் உடலை வருத்திக்கொண்டு எந்த விரதத்தையும் எடுக்க வேண்டாம்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விரதம் இருப்பவர்கள் என்ன நினைத்து விரதம் இருந்தாலும் நடக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அது போல் ஒரு வேலை விரதம் மன நிறைவோடு முழு பக்தியோடு செய்பவர்களுக்கு முழு நன்மை கிடைக்கும்.

சஷ்டி விரதம் இருக்கும் முறை:

விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். முருகன் படத்திற்கு மஞ்சள் பொட்டு வைத்து, பூக்கள் போட்டு முருகனை போற்றி பாடிய பாடலை பாடி பூஜை செய்ய வேண்டும்.

காலை முதல் மாலை வரை விரதம் இருப்பவர்கள் முருகனை போற்றி பாடிய பாடலை பாடி மன நிறைவோடு பூஜை செய்து இந்த விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

சிலர் காலையிலிருந்து தண்ணீர் குடிக்காமல் கூட விரதம் எடுப்பார்கள். அப்படி எடுக்க வேண்டும் என்பது ஐதீகம் இல்லை. விரதம் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அது போல் உங்கள் உடல் நலம் முக்கியம். அதனால் தண்ணீர் குடிக்கலாம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top