ஞாயிறு:
துர்க்கை சன்னதியில் மாலை 4:30-6:00 மணிக்குள் விளக்கேற்றி சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். செல்வம் பெருக இதைச் செய்வர்.
திங்கள்:
காலை 7:30- 9:00 மணிக்குள் வெண்ணெய் காப்பு செய்து வெண்பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். மூட்டு நோய் நீங்கவும், கல்வியில் சிறக்கவும் இதைச் செய்யலாம்.
செவ்வாய்:
மதியம் 3:00- 4:30 மணிக்குள் வடக்கு நோக்கி எரியும் வகையில் தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். மாங்கல்ய பலம், குழந்தை பாக்கியத்திற்கு இந்த வழிபாடு.
புதன்:
மதியம் 12:00 முதல் 1:30மணிக்குள் பஞ்சுத்திரி விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்ய வேண்டும். பதவி உயர்வு, ரத்த சம்பந்தமான நோய் தீர இதைச் செய்யலாம்.
வியாழன்:
மதியம் 1:30- 3:00 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். வியாபார லாபத்திற்கும், இருதய நோய் நீங்கவும் இதைச் செய்யலாம்.
வெள்ளி:
காலை 10:30- 12:00 மணிக்குள் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபமேற்றி, தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். தீராத துன்பம் தீரவும், ராகு தோஷத்தால் திருமணத்தடை நீங்கவும் இதைச் செய்யலாம்.
சனி:
காலை 9:00 - 10.30 மணிக்குள் மஞ்சள் துணித்திரியில் விளக்கேற்றி, காய்கறியுடன் சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். வேலை வாய்ப்பு, சிறுநீரக கோளாறு நீங்க, அரசியலில் வெற்றி பெற இந்த வழிபாடு உதவும்.
ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு வழிபாடு :
விரதமிருந்து ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது.
ராகுகால துர்க்கை விரத பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். அப்போது எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள். விரைவில் அந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும்.