அம்பிகையின் பூரண ஆத்ம குணங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அம்பிகையின் பூரண ஆத்ம குணங்கள் பற்றிய பதிவுகள் :

அம்பிகையின் கருணை கடாட்சத்தை பெற அம்பிகையின் திருநாமங்களை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தாய்க்கு தாயான அம்பிகை, நம்முடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்று அருள்பாவிக்கிறாள்.

1.தயை =சகல ஜீவன்களிடமும் இரக்கம் காட்டுதல் 

2.சாந்தி=தீமை செய்பவரிடம் இரக்கம் கொண்டு அவர்களை மன்னித்தல் 

3.அநஸூயை=பொறாமை இல்லாமை 

4.கெளசம்=உடல்,மனம்,வாக்கு ஆகிய மூன்றிலும் தூய்மையாக இருந்தல் 

5.அநாயாசம் =மற்ற உயிரினங்களுக்கு எந்தவகையில் சிரமம் கொடுக்காமல் இருப்பது 

6.மங்களரூபிணி=சமய ஆசாரங்களைக் கடைப்பிடித்து தூய்மையுடன் இருப்பது 

7.அகார்ப்பண்யம் =எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தைரியமாக இருப்பது.முடிந்தவரை சத்காரியங்களைச் செய்து கொண்டிருப்பது.

8.அஸ்ப்ருஹா=பிறர் பொருளில் ஆசையின்மை 

இந்த எட்டு குணங்களுடன் நாம் வாழும்போதுதான் நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும். இந்த குணங்களை பெற்று நாம் சிறப்புற வாழ வேண்டும். அதற்கு இருப்பிடமான அம்பிகையை சரணடைவதை தவிர, வேறு வழி இல்லை.

தன்னை ஆத்மாத்தமாக வழிபடும் பக்தனுக்கு, இந்த குணங்களை தந்து, அவனை உயர்நிலைக்கு அழைத்து சென்று, சந்தோஸம் அளிப்பதே அம்பிகையின் குணமாகும் . 

தேவியின் திருவருளை பெற வேண்டுமானால், நம் வீட்டு பெண்களை ஆதிசக்தியாகவே கருதி போற்ற வேண்டும். பராசக்தியாக அம்பிகையே! பெண்கள் வடிவில் ஒவ்வொரு இல்லத்திலும் ஆட்சி செய்கிறாள்.

பராசக்தியிடம் அத்தனை சக்தி இருந்தாலும், தமது சக்தியை அடக்கி ஒடுக்கிக் கொண்டு 'ஸதி' என்ற பெயருடன் மஹா பதிவிரதையாக ஸ்ரீ பரமேஸ்வரனின் சாந்தத்தில் தமது மனநிறைவைப் பெறுகிறார். அதனால்தான் அம்பிகைக்கு "சிவசக்தி ரூபிணி" என்ற பெயரும் வந்தது. இதுபோன்று, மனைவி தன் கணவனுக்கு அனைத்து காரியங்களிலும் ஊறுதுணையாக இருந்தால், குடும்பநலம் பெருகும்.

அபிராமிபட்டர் அருளிய பாடலை தியான நிலையில் இருந்து சொல்லி வந்தால் சகல நலனும் கிட்டும்.

நாயகி, நான்முகி, நாராயணி, கைநளின பஞ்ச சாம்பவி, சங்கரி, சாமனை, சாதிநச்சு வாய் அகிமாலினி, வாராகி, கூலினி, மாதங்கி என்று 
ஆய கியாதியுடையாள் சரணம் --அரண் நமக்கே!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top