தேய்பிறை சஷ்டி மற்றும் திருவோணம் விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தேய்பிறை சஷ்டி மற்றும் திருவோணம் விரதம் பற்றிய பதிவுகள் :

தேய்பிறை சஷ்டி விரதம்

'வினை தீர்ப்பான் வேலவன்" என்பது வெறும் வார்த்தை அல்ல. அவரின் அருளால் வினை நீங்கப் பெற்ற அவரது அடியார்களின் அனுபவப்பூர்வ வாக்காகும். அப்படிப்பட்ட முருகனுக்குரிய ஒரு சிறப்பான தினம் 'சஷ்டி தினம்".

மாதந்தோறும் வருகிற சஷ்டி மிகவும் விசேஷமானது. வழிபாட்டுக்கும், பூஜைக்கும் உரிய அற்புதமான சஷ்டி திதியில் முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வது எண்ணற்ற பலன்களைத் தரும்.

தேய்பிறை சஷ்டி விரதத்தின் பலன்கள்

• திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

• ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்.

• பொருளாதாரத்தில் இருந்துவந்த தேக்க நிலை நீங்கும்.

• தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும்.

• நேரடி, மறைமுக எதிரிகள் ஒழிவார்கள்.

• உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

திருவோண விரதம் பலன்கள்

திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது.

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு" என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருவோண விரதத்தின் பலன்கள் :

• திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

• திருமணத்தடை உள்ளவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் விரைவில் நல்ல வரன் அமையும்.

• குழந்தை இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் மற்றும் செல்வம் நிலைத்து நிற்கும்.

• மாதந்தோறும் திருவோண நாளில் திருமாலை வழிபட்டு விரதம் இருந்தால், சீர் குலைந்த மனம் சீராகும்.

• உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட பகை அகலும். துன்பங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

• திருவோண நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதால் கல்விச் செல்வம் மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் கிடைக்கும்.

• இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருவோண நட்சத்திரத்தன்று சுண்டலை நைவேத்தியமாக பெருமாளுக்கு படைத்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பெருகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top