துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரம் பற்றிய பதிவுகள் :

கோயில்களுக்கு அழகு தருவது கொடிமரமாகும். பக்தர்களை காக்கவும், இறை சக்தியை அதிகரிக்கவும், தீய சக்திகளை விரட்டவும் கோயிலில் கொடிமரம் நடப்படுகிறது. 

இதில் சூட்சும ரகசியம் என்னவென்றால் கொடிமரம் அடியில் சதுரமாக இருக்கும் இது இறைவனின் படைக்கும் கடவுள் பிரம்மனை குறிக்கிறது.

அதன் மேல் பாகம் கோண வடிவில் இருக்கும் இது காக்கும் கடவுள் மாகாவிஷ்ணுவை குறிக்கிறது.அதன் மேல் பாகம் உருண்டு நீளமாக இருக்கும்,அகம்பாவத்தை அழிக்கும் உருத்திரனை(சிவன்) குறிக்கிறது.

அதாவது கோயிலில் நமக்கு முதலில் காட்சியளிக்கும் கொடிமரம் மும்மூர்த்திகளின் முத்தொழிலை நமக்கு உணர்த்துகிறது. கோயிலில் நடக்கும் திருவிழா கோடியேற்றத்துடன் ஆரம்பிக்கிறது.

இதன் தத்துவம் என்னவென்றால் நாம் பூமியில் பிறந்து (படைத்தல்), நல்ல நிலையில் வாழ்ந்தாலும் (காத்தல்), கடைசியில் சிவனின் காலடியில் சரணடைகிறோம் (அழித்தல்) என்பதை உணர்த்துவதாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top