உடலில் திருநீறு அணியும் இடங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து உடலில் திருநீறு அணியும் இடங்கள் பற்றிய பதிவுகள் :

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. 

அவை :

1.தலை நடுவில் (உச்சி)
2. நெற்றி
3. மார்பு
4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5. இடது தோள்
6. வலது தோள்
7. இடது கையின் நடுவில்
8. வலது கையின் நடுவில்
9. இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
13. வலது இடுப்பு
14. இடது கால் நடுவில்
15. வலது கால் நடுவில்
16. முதுகுக்குக் கீழ்
17. கழுத்து முழுவதும்
18. வலது காதில் ஒரு பொட்டு
19. இடது காதில் ஒரு பொட்டு

அணியும் முறை :

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். 

விபூதியை எடுக்கும் போது ஓம் நமசிவாய என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். 

ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.

நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை உத்தூளனம் எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை திரிபுண்டரம் எனப்படும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top