குடும்பத்தின் நலம் வேண்டி முதலில் செய்ய வேண்டிய கணபதி ஹோமம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கணபதி ஹோமம் பற்றிய பதிவுகள் :

ஒரு குடும்பத்தின் நலம் வேண்டி முதலில் செய்ய வேண்டியது கணபதி ஹோமம் ஆகும். நாம் ஒரு கடிதம் எழுதினால் கூட பிள்ளையார் சுழியுடன் துவங்குவது தான் மரபு. விநாயகரே முழு முதற்கடவுள் ஆவார். எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். 

வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது நன்மையை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம்.

கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்யப்படுகிறது.

புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது மிகச்சிறந்த பலனைத்தரும். நமது சக்திக்கு ஏற்றபடி செலவு செய்து இந்த பூஜையை நடத்தலாம். 

கணபதி ஹோமத்திற்கு பொரி, அவல், சத்துமாவு, கொழுக்கட்டை, அப்பம், அறுகம்புல், கரும்புதி துண்டு, எருக்கம்பூ ஆகியவை அவசியமாகும். கணபதி ஹோமம் வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் செய்வது விசேமாகும்.

1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வளம் தரும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை நிறைவேற்றும். 

தேன் தங்கம் தரும். நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யத்தை தரும். மோதகம் போரில் வெற்றி தரும். மட்டை உரிக்காத தேங்காய் மந்திர சக்தியை நல்கும். தாமரை செல்வ வளர்ச்சி தரும். வெண்தாமரையால் வாக்கு சித்தி ஏற்படும். தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top