ஹோமங்களும் அதன் பயன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஹோமம் அல்லது யாகங்கள் பற்றிய பதிவுகள் :

ஹோமம் அல்லது யாகங்கள் என்பது அக்னி வளர்த்து செய்யப்படும் ஒரு பூஜை முறையே ஆகும். தெய்வ சக்தியினை சில வழிமுறைகள் மூலம் அக்னியில் எழுந்தருளச் செய்து, அவர்களுக்கு செய்யப்படும் ஒரு முழுமையான பூஜை முறையே ஹோமம் ஆகும். 

இதில் பல பொருட்கள் மந்திரங்களின் மூலம் எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்யப்படுகிறதோ அந்த தெய்வத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. ஹோமத்தீயில் தெய்வங்களை எழுந்தருளச் செய்து பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரத்தினை உச்சரித்து நம் குறைகளை மற்றும் தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன. 

பண்டைய காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்களின் நன்மைக்காகவும் ஹோமங்கள் செய்தார்கள். பிற்காலத்தில் மன்னர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், மக்களின் நன்மைக்காகவும் ஹோமங்கள் செய்தார்கள். 

தியான வழிமுறையில் இறைவனை வழிபடும் போது உடலிற்குள் இருக்கும் அக்னி மூலமாக நமது வழிபாடுகள் இறைவனை சென்றடைகிறது. உடலிற்குள் இருக்கும் மூன்று தீயையும் கண்டறிவதற்கான உடலிற்கு வெளியே செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையே ஹோமங்களாகும். அக்னியிற்கு எல்லாவற்றையும் எரிக்கும் சக்தி உள்ளது. முறையான மந்திரங்கள் சொல்லி வளர்க்கப்படும் அக்னி நமது பாவங்களை எரித்து விடுகிறது.

ஹோமங்களும் அதன் பயன்களும்: 

கணபதி ஹோமம்

 தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

சண்டி ஹோமம்

 பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.

நவகிர ஹோமம்

 கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

சுதர்ஸன ஹோமம்

 ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

ருத்ர ஹோமம்

 ஆயுள் விருத்தி உண்டாகும்.

மிருத்யுஞ்ச ஹோமம்

 மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.

சுயம்வர கலா பார்வதி ஹோமம்:

 பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும். 

காந்தர்வ ராஜ ஹோமம்

 ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

லக்ஷ்மி குபேர ஹோமம்

 செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும். 

தில ஹோமம்

 சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும். 

ப்ரத்யங்கிரா ஹோமம்

 நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். 

பிரம்மத்தி ஹோமம்

 எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும். 

கண்திருஷ்டி ஹோமம்

 திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.

கால சர்ப்ப ஹோமம்

 திருமண தடை மற்றும் உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top