கோவிலில் பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கோவிலில் பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றிய பதிவுகள் :பொதுவாக எந்தக் கோவிலை வலம் வந்தாலும் அல்லது சந்நிதிகளை சுற்றி வந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு சுற்றிவருவது விசேஷமாகும். 

" யாநி காநிச பாபாநி 
ஜன்மாந்த்ர கிருதாநிச!

தாநி தாநி ப்ரணச்யந்தி 
பிரதட்சிண பதே பதே! "

 பல ஜென்மங்களில் செய்த பாவங்கள், கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும் என்பது இதன் பொருள். பிரதட்சணம் செய்யும் பொது நிதானமாக அடிமேல் அடிவைப்பது போல நடக்க வேண்டும்.

 • மூன்று முறை வலம் வந்தால் - இஷ்ட சித்தி அடையலாம்.

 • ஐந்து முறை வலம் வந்தால் - வெற்றிகள் கிட்டும்.

 • ஏழு முறை வலம் வந்தால் - நல்ல குணங்கள் பெருகும்.

 • ஒன்பது முறை வலம் வந்தால் - நல்ல புத்திர பாக்கியம் கிட்டும்.

 • பதினோரு முறை வலம் வந்தால் - ஆயுள் பெருகும்.

 • பதின் மூன்று முறை வலம் வந்தால் - செல்வம் பெருகும்.

 • நூற்றியெட்டு முறை வலம் வந்தால் - அசுவமேத யாகத்தில் கலந்து கொண்ட பலன் கிட்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top