சுதர்சன சக்கரத்தின் மகிமைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சுதர்சன சக்கரத்தின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொரு கடவுளின் கைகளிலும் ஒரு ஆயுதம் இருக்கும். அந்த ஆயுதம் மனிதர்களின் நன்மைக்காக கடவுள் ஏந்தியுள்ளார் என்பதை குறிக்கும். 

கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது, அதன் ஆற்றல் அளவிட முடியாதது. சக்கரம் என்பது வட்டத்தின் அடிப்படையில் அமைந்தது. கோளத்தின் சுருக்கமே வட்டம். இந்த பிரபஞ்சத்தின் சூட்சும ரகசியமே வட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

தர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள். சக்ரா என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.

சாதாரணமாக சுதர்சன சக்கரம் கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும். ஆனால் விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.

எதிரிகளை அழித்த பின் சுதர்சன சக்கரம் மறுபடியும் அதன் இடத்திற்கே திரும்பி விடுகிறது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.

ஏதாவது தடை எதிர்பட்டால், சுதர்சன சக்கரத்தின் வேகம் அதிகரிக்கிறது. இதை ரன்ஸகதி என்பர். சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை. அதனுடைய வடிவம் எத்தகையது என்றால், சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலநாட்டுவதே சுதர்சன சக்கரமாகும். வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள் அதாவது நாம் செய்யும் நன்மையும், தீமையும் நமக்கே திரும்ப வரும் அதுதான் சூட்சுமத்தின் ரகசியம்.

இந்த உலகமும், உலகத்தில் உள்ள பொருட்களும் சுழற்சியின் அடிப்படையிலேயே இயங்குகிறது. உயர்ந்தவன் தாழ்வதும், தாழ்ந்தவன் உயர்வதும் இயற்கையின் விதியாகும். உயந்தவர் கீழே விழாமல் இருக்க தன்னம்பிகையுடன் கூடிய உழைப்பும், பணிவும், நிதானமும் தேவை. கீழே இருப்பவர் மேலே வர விடமுயற்சியும், தன்னம்பிகையும் இருந்து நல்ல விதியும் இருந்தால் போதும். வாழ்வில் முன்னேற்றமே.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top