ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில், ஸ்ரீ ஆஞ்சநேய பெருமான் ஸ்ரீ ராம, லட்சுமணனை தனது தோளில் சுமந்தார். அதன் காரணமாக, ராம பிரானால் போரில் எளிதில் வெற்றி பெற முடிந்தது.
என்றாலும், தோளில் ஸ்ரீ ராம, இலக்குவர்களைத் சுமந்த போது ராவணன் மற்றும் மற்ற அரக்கர்கள் விடுத்த அம்பினால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உடலில் ரத்தக் காயங்கள் (பல இடங்களில்) ஏற்பட்டது. அப்பொழுது, ஸ்ரீ ராமர் தனது கரத்தால் ஆஞ்சநேயரின் உடலில் வெண்ணெயை சாற்றினார்.
அதன் மூலம் ஸ்ரீ ஆஞ்சநேயரின் உடல் ரணங்கள் மறைந்து அவருக்கு குளிர்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு முதன் முதலில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்தியது ஸ்ரீ ராமர் தான்.
இந்த இனிய சம்பவத்தை (ராமபிரான் அன்போடு) அனுமனுக்கு வெண்ணெய் சாற்றியதை) நினைவு படுத்தும் விதமாகவும், மேலும் வெண்ணெய்க் காப்பு சாற்றுகின்றனர்.
வெண்ணை சாற்றுவதன் மூலம் ஆஞ்சநேயரை குளிர்விப்பதர்க்காகவும் பக்தர்கள் இன்று வரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் சாற்றி வழிபடுகின்றனர்.
நன்றி கடவுள்அருள்எனக்குகிடைக்கும்
ReplyDelete