ஐவகை வகை நமஸ்காரங்கள்‌

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஐவகை வகை நமஸ்காரங்கள்‌ பற்றிய பதிவுகள் :

நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும். அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

ஓரங்க நமஸ்காரம்:

வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.

மூன்று அங்க நமஸ்காரம்:

வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்.

பஞ்ச அங்க நமஸ்காரம்:

வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகம்.

அஷ்டாங்க நமஸ்காரம்:

ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.

சாஷ்டாங்க நமஸ்காரம்:

வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழங்கால்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

செயல் ஆவது யாதொன்றும் இல்லை, எல்லாம் உன் செயல், என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top