முருகனின் பதினாறு திருக்கோலங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து முருகனின் பதினாறு திருக்கோலங்கள் பற்றிய பதிவுகள் :

அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்று பெயர். அனைவரின் மனதிலும் கூடி கொள்ளும் முருகனை ராஜ வடிவில் காண, கண் கோடி வேண்டும். குறிஞ்சி நிலக்கடவுளான முருகன் பதினாறு திருக்கோலங்களில் அருளாட்சி புரிகின்றார்.

சக்திதரன் : 

ஒரு முகம், இரு கரங்கள், சக்திப்படையுடன் காட்சியளிப்பவர்.

ஸ்கந்தன் : 

இடையில் கௌபீணம் மட்டும் தரித்து தண்டம் பற்றிய பழனி ஆண்டியின் திருக்கோலம்.

கஜவாகனன் : 

யானை மீதமர்ந்து நான்கு கரங்களுடன் கொண்ட கோலம்.

சரவணபவனன் : 

பன்னிரு கரங்கள், ஒரு முகம், ஆறு குழந்தையாகத் தோன்றி அம்பிகையால் ஒரு முகமாக மாற்றப்பட்ட திருக்கோலம்.

தேவசேனாபதி : 

ஆறுமுகம் - பன்னிருகரங்கள் கொண்டு இந்திரனின் மகளான தெய்வானையை மணந்த கோலம்.

சுப்பிரமணியன் : 

ஒரு முகம், நான்கு கரங்கள், ஆயுதம் பற்றிய கீழ்க்கரங்களால் அபயம், வரம் அளித்து அருளும் கோலம் கொண்டவன்.

கார்த்திகேயன் : 

ஆறுமுகங்களும் ஆறு கரங்களும் உடையவன். அபய-வரமளிக்கும் கரங்கள். பிற கரங்களில் ஆயுதங்கள் கொண்ட கோலம்.

குமரன் : 

நான்கு கரங்களுடன் தேவியான தெய்வானை வலப்புறத்தில் அமைய நின்ற திருக்கோலத்தில் அருள்பவன்.

ஷண்முகன் : 

ஆறுமுகங்களோடு பன்னிரு கரங்கள் ஆயுதங்கள் ஏந்திய நிலை. மயில் மீது முருகன் அமர்ந்திருக்க அருகில் தேவியர் நின்ற கோலம்.

தாரகாரி : 

சூரபத்மனின் தம்பியான தாரகாசுரனை அழிக்கப் பூண்ட கோலம். ஆறுமுகம் பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் ஏந்திய போர்த் திருக்கோலம்.

வள்ளிமணாளன் : 

தமிழரின் பண்பாடான களவு ஒழுக்கத்தின் மூலம் காதல்கொண்டு திருமணம் புரிந்த கோலம்.

பாலமுருகன் : 

சிறிய பாலக வடிவம், ஒரு கரத்தில் தாமரை மலர்கள், மற்றொரு கரத்தை இடைமீது இருத்திய அழகிய தோற்றம்.

சேனாளி : 

ஆறுமுகம் பன்னிரு கரங்கள், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை, ஏனைய கரங்களில் ஆயுதங்கள்.

கிரௌஞ்சபேதன் : 

தாரகன், சூரனின் தம்பி இவன் கிரௌஞ்சமலை என்ற மலையின் வடிவில் தனது அண்ணனின் கோட்டையைக் காத்து நின்றான். சக்திவேலின் மூலம் அவனை அழித்து நின்ற திருக்கோலம். ஆறுமுகம், ஆயுதம் தாங்கிய பன்னிருத் திருக்கோலங்கள்.

சிகிவாகனன் : 

சூரனின் சம்ஹாரத்திற்குப் பின் மயிலான அசுரனின் மீது அமர்ந்த கோலம்.

பிரம்ம சாஸ்தா :

பிரணவத்தின் பொருளறியா பிரம்மனை சிறையிலடைத்து, தானே அவரது படைப்புத் தொழிலை ஏற்றதால், பிரம்மனது பொருட்களான அட்சமாலை மற்றும் கெண்டியை ஏந்திய திருக்கோலம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top