எந்த திதிகளில் எந்த விநாயகர் வழிபாடு விசேஷ பலன் தரும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து எந்த திதிகளில் எந்த விநாயகர் வழிபாடு விசேஷ பலன் என்பதைப் பற்றிய பதிவுகள் :

நாம் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்ட கணபதி ரூபத்தை வணங்கும் போது நாம் முன்னெடுக்கும் செயலுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. 

பிரதமை திதி - பால கணபதி

பால கணபதியை பிரதமை திதியில் வணங்கி வந்தால் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்குவதோடு, சீதள நோய் குணமாகும்.

துவிதியை திதி - தருண கணபதி

துவிதியை திதியில் தருண கணபதியை வணங்குவது சிறப்பு. இந்த நாளில் தருண கணபதியை வணங்கி வர வலிப்பு நோய் குணமாவதோடு, நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கணேசன் துணை நிற்பார்.

திருதியை திதி - பக்தி கணபதி

தொழில், உத்தியோகம் அல்லது சில காரணங்களுக்காக ஊர் விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வசிப்பவர்கள் திருதியை திதியில் பக்தி கணபதி வணங்கி வர நன்மை ஏற்படும்.

சதுர்த்தி திதி - வீர கணபதி

ஒருவருக்கு திருமண வரன் அமைவதில் தடங்கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு இருப்பின் அவர்கள் வீர கணபதியை வணங்கி வந்தால் நிவர்த்தி ஆகும்.

பஞ்சமி திதி - சக்தி கணபதி

பஞ்சமி திதியில் சக்தி கணபதியை வணங்கி அன்னதானம் செய்து வழிபட்டு வந்தால் வாகன விபத்து உள்ளிட்ட எந்த விபத்துகளும் அண்டாதவாறு காத்தருளுவார்.

சஷ்டி திதி - துவிஜ கணபதி

பல பிறவிகளாக நம்மை தொடரும் பாவங்கள் அகல, நாம் செய்யக் கூடிய தொழில் மேம்பட சஷ்டி தோறும் த்விஜ கணபதியை வழிபடுங்கள்.

சப்தமி திதி - சித்தி கணபதி

தொழில், வியாபாரம் செய்பவர்கள் குறிப்பாக இரும்பு தொழில் செய்பவர்கள் சப்தமி திதி அன்று சித்தி கணபதியை வணங்கி வாருங்கள்.

அஷ்டமி திதி - உச்சிஷ்ட கணபதி

கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள், கல்வித் துறையில் இருப்பவர்கள் அஷ்டமி அன்று உச்சிஷ்ட கண்பதியை வணங்குவதால் முன்னேற்றம் ஏற்படும். அதோடு கோயில் வேலை செய்பவர்களுக்கு இந்த வழிபாடு நல்ல பலனை அள்ளித்தரும்.

நவமி திதி - விக்ன கணபதி

வட்டி கடை நடத்துபவர்களும், பொன், பொருள் விற்பனை செய்பவர்கள் நவமி திதியில் விக்ன கணபதியை வணங்கி வந்தால் அவர்களின் தொழில் மேம்படும்.

தசமி திதி - ஷூப்ர கணபதி

சினிமா உள்ளிட்ட கலைத்துறையினரும், கணினி துறை, கட்டடத் துறையில் வேலை பார்ப்பவர்கள் தசமி திதிகளில் ஷிப்ர கணபதியை வணங்கி வந்தால் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

ஏகாதசி திதி - ஹேரம்ப கணபதி

விவசாயம், பொறியியல், காவல் துறை, அறிவியல் ஆராய்ச்சி செய்பவர்கள், வரித்துறையில் இருப்பவர்கள் ஏகாதசி திதிகளில் ஹேரம்ப கணபதியை வணங்கி வந்தால் எல்லா வளங்களும் கிடைக்கும்.

துவாதசி திதி - லட்சுமி கணபதி

எந்த ஒரு வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் துவாதசி திதிகளில் லட்சுமி கணபதிக்குப் பொங்கல் வைத்து படைத்து வழிபட்டால் லாபம் உண்டாகும்.

பிரதமை திதி - மஹா கணபதி

எழுத்தாளர்கள், பத்திரிக்கை அன்பர்கள், உருக்கு ஆலை, சுங்கத்துறை, விமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மஹா கணபதியை பிரதமை திதிகளில் வணங்கி வரவும்.

சதுர்த்தி திதி - விஜய கணபதி

நீதித்துறையில் இருக்கும் அதிகாரிகள், பணியாளர்கள் சதுர்த்தி திதியில் விஜய கணபதியை வணங்கி வந்தால் எல்லா வழக்கு மற்றும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.

அமாவாசை அல்லது பவுர்ணமி திதி - நிருத்த கணபதி

குடும்ப சண்டைகள் நீங்கி ஒற்றுமை வளர்வதோடு, பிதுர், தேவதைகளின் ஆசி கிடைக்க பெளர்ணமி / அமாவாசை திதிகளில் நிருத்த கணபதியை வணங்கி வரவும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top