ஆடி மாதத்தின் நிறைவு வெள்ளிக்கிழமை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி மாதத்தின் நிறைவு வெள்ளிக்கிழமை பற்றிய பதிவுகள் :

ஆடி மாதம் என்பது சக்திக்கு உரிய வழிபாடு மாதம். ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவான் கிருஷ்ணர் சொன்னது போல், ‘மாதங்களில் ஆடியாக இருக்கிறேன்’ என்று சக்தியான பராசக்தி கூறுகிறாள். அதனால், இந்த மாதத்தில் உலகெங்கும் மஹாசக்தியின் அளப்பரிய சக்தியானது வியாபித்திருக்கும் என்கிறார்கள்.

பொதுவாகவே, செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். அன்னை வழிபடுவதற்கு உரிய விசேஷமான நாட்கள். அதனால்தான் வீட்டிலும் ஆலயத்திலும் அன்றைய நாளில், விசேஷ பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் இன்னும் மகத்துவம் நிறைந்த நாட்களாக கருதப்படுகிறது.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு புடவை முதலான மங்கலப் பொருட்களும் சேர்த்துக் கொடுப்பது தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்யும். கணவரின் ஆயுள் பெருகும். தடைப்பட்ட மங்கல - சுப காரியங்கள் அனைத்தும் தங்கு தடையில்லாமல் விரைவில் நிகழும்.

வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெற்று இனிதான வாழ்க்கையை அமைத்துத் தருவாள் மஹாசக்தி.

ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி நமஸ்கரிப்பதும் ஆசீர்வதிப்பதும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆடி மாதத்தில் இதுவரை வந்த வெள்ளிக்கிழமைகளில், நீங்கள் பூஜித்து அம்பாள் வழிபாடு செய்திருந்தாலும், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் அவசியம் பூஜை செய்யுங்கள். அம்பாளுக்கு உகந்த செந்நிற மலர்களை சார்த்துங்கள்.

லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் ஐந்துமுகம் கொண்ட விளக்கு ஏற்றி வைப்பது மகோன்னதமானது. 

வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்த பூஜையை மேற்கொள்ளுங்கள். தேவியை ஆராதித்து தீப தூப ஆராதனை செலுத்தி, பால் பாயசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள்.

சுமங்கலிக்கு வெற்றிலை, பாக்குடன், புடவை, வளையல், குங்குமம், மஞ்சள் வைத்து வழங்கி, அவரிடம் நமஸ்கரியுங்கள். ஒரேயொரு சுமங்கலிக்கு வழங்கினாலே போதுமானது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top